தமிழகம்

மன்னார்குடி அருகே காரக்கோட்டையில் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி கிராம மக்கள் தொடர் உண்ணாவிரதம்

செய்திப்பிரிவு

மன்னார்குடி அருகே டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி கிராம மக்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே காரக்கோட்டை கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி நேற்று முதல் அந்தக் கிராமத்தைச் சேர்ந்த சுமார் 100 பேர் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

போராட்டத்தை கிராம கமிட்டித் தலைவர் கோவிந்தராஜன் தலைமையில், சமூக ஆர்வலர் சிவானந்தம் தொடங்கி வைத்தார். கிராம கமிட்டி பிரமுகர்கள் சீனிவாசன், ராஜகோபால், போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் முருகானந்தம், தமிழக காவிரி விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் சேரன்குளம் செந்தில்குமார் மற்றும் உள்ளூர் பிரமுகர்கள் பேசினர்.

உச்ச நீதிமன்ற உத்தரவை மதித்து தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கடை என்ற அடிப்படையில், எங்கள் ஊர் டாஸ்மாக் கடையை அகற்றும் வரை போராட்டம் தொடரும் என தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறினர்.

SCROLL FOR NEXT