நடிகர் ரஜினிகாந்துக்கு திமுக தலைவர் கருணாநிதி பிறந்தநாள் வாழ்த்துகள் கூறினார்.
இது குறித்து அவர் இன்று தனது முகநூல் பக்கத்தில் பதிந்தது: "சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் 64வது பிறந்தநாளை முன்னிட்டு, நான் இன்று ரஜினிகாந்த் அவர்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு எனது பிறந்தநாள் வாழ்த்தினை தெரிவித்தேன்" என்று கூறியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த், தனது 64-வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 12-ம் தேதி, அவரது பிறந்தநாள் விழா, தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் அவரது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
ரஜினிகாந்த் பெரும்பாலும் தனது பிறந்தநாளில் சென்னையில் இருப்பதில்லை. எப்போதாவது மட்டும் சென்னையில் பிறந்தநாள் கொண்டாடி, நண்பர்களையும் ரசிகர்களையும் சந்திப்பார்.
இந்த பிறந்த நாளில் அவர் சென்னையில் இல்லை. திருத்தணி கோயிலுக்கு சென்று முருகனை தரிசித்துவிட்டு, பெங்களூர் சென்றுவிட்டார்.