தமிழகம்

ஜூலை 11-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்: இந்திய ஊழியர் சம்மேளனம் அறிவிப்பு

செய்திப்பிரிவு

அகில இந்திய பாதுகாப்புத் துறை ஊழியர்கள் சம்மேளனத்தின் பொதுச் செய லாளரும், மத்திய அரசு ஊழியர் போராட்டக்குழு உறுப்பினருமான ஸ்ரீ.ஸ்ரீகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:

7-வது ஊதியக் குழு பரிந்துரைக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில் ஊழியர் சங்கத்தின் ஒரு கோரிக் கையைக்கூட மத்திய அரசு ஏற்க வில்லை. உதாரணமாக, கடைநிலை ஊழியர்களின் ஊதியம் ரூ.15 ஆயிரத்தில் இருந்து 18 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதை 26 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என நாங்கள் கோரியிருந்தோம். எங்களின் கோரிக்கை ஏற்கப்படவில்லை. அதேபோல், அரசு ஊழியரின் ஆண்டு அடிப்படை சம்பளத்தில் 5 சதவீதம் ஊதிய உயர்வு வழங்க வேண்டும் எனக் கூறினோம். ஆனால், 3 சதவீத உயர்வு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது

இந்த ஊதிய உயர்வில் ரூ. 1,800 ஓய்வூதியத்துக்கும், ரூ.1,500 காப்பீட்டுத் தொகைக்கும் பிடித் தம் செய்யப்படும். இதனால் இப்புதிய ஊதிய உயர்வி னால் ஊழியர்களுக்கு எவ்வித பயனும் ஏற்படப் போவதில்லை.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை யையும் மத்திய அரசு நிராகரித்து விட்டது. இதன் மூலம் மத்திய அரசு, ஊழியர்களை வஞ்சித்து விட்டது.

எனவே திட்டமிட்டபடி வரும் ஜூலை 11-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவோம்.

இவ்வாறு ஸ்ரீகுமார் கூறினார்.

SCROLL FOR NEXT