தமிழகம்

மீட்டர் கட்டணத்துக்கு ஆட்டோ ஓட்டுநர்கள் எதிர்ப்பு

செய்திப்பிரிவு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆட்டோக்களில் மீட்டர் பொருத்திய கட்டணம் வசூலிக்கும் நடை முறைக்கு ஆட்டோ ஓட்டுநர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆட்டோக்களில் மீட்டர் பொருத் திய கட்டணம் வசூலிப்பு முறை, நேற்று முன்தினம் முதல் நடை முறைப் படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்தார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்தும் ஆட்டோ ஓட்டுநர்கள் இந்தப் புதிய கட்டண முறைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து மீட்டர் கட்டண முறையை பின்பற்றாததால் பொது மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ள னர். மேலும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மதுராந்தகம், மாமல்லபுரம், கேளம்பாக்கம், மறைமலைநகர் ஆகிய நகரப் பகுதிகள் 5 கி.மீ பரப்பளவிலேயே அமைந்துள்ளதால், இந்தப் பகுதிகளில் மீட்டர் கட்டண முறையால் எங்களுக்கு நஷ்டமே ஏற்படும் என ஆட்டோ ஓட்டுநர்கள் மாவட்ட நிர்வாகத்துக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் சண்முகம் கூறியதாவது: ‘ஆட்டோக்களில் மீட்டர் பொருத்த 45 நாட்கள் கால அவகாசமும் அளிக்கப்பட்டுள்ளது. ஒரு சில நாட்களில் அனைத்து ஆட்டோ ஓட்டுநர் சங்க நிர்வாகிகளின் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு மீட்டர் கட்டண முறையை அமல்படுத்துவது குறித்தும், ஆட்டோ ஒட்டுநர்களின் கோரிக்கை தொடர்பாகவும் கலந்தாலோசிக்க உள்ளோம்’ என்றார்.

SCROLL FOR NEXT