தூத்துக்குடியில் பிடிபட்ட அமெரிக்க கப்பலைச் சேர்ந்த ஊழியர்கள் 35 பேரின் ஜாமீன் மனுவை, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இன்று தள்ளுபடி செய்தது.
முன்னதாக, தூத்துக்குடி கடலில் அத்துமீறி நுழைந்த அமெரிக்க கப்பலை கடந்த அக்டோபர் மாதம் 12-ம் தேதி இந்திய கடலோர காவல் படையினர் பிடித்தனர்.
அதைத் தொடர்ந்து, அந்தக் கப்பலில் இருந்த 35 ஊழியர்களைக் கைது செய்து சோதனை நடத்தியதில், அந்தக் கப்பலில் ஆயுதங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, அவை பறிமுதல் செய்யப்பட்டன.
இது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைதான ஊழியர்கள் அனைவரும் சென்னை புழல் மற்றும் பாளை சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், அமெரிக்க கப்பல் ஊழியர்கள் 35 பேரின் ஜாமீன் மனுவை, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இன்று தள்ளுபடி செய்தது.