ஈவிகேஎஸ் இளங்கோவன் ராஜி னாமா செய்து ஒன்றரை மாதங்கள் கடந்த பிறகும் தமிழக காங்கிரஸுக்கு புதிய தலைவரை நியமனம் செய்ய முடியாமல் அக்கட்சி மேலிடம் திணறி வருகிறது. இதனால், கட்சிப் பணிகள் முடங்கியுள்ளன.
இதற்கிடையே, சோனியா காந்தியை சந்திப்பதற்காக கடந்த 2 நாட்களாக இளங்கோவன் டெல்லியில் காத்திருக்கிறார்.
சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று, தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து இளங்கோவன் கடந்த மாதம் 15-ம் தேதி ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை கட்சித் தலைவர் சோனியா காந்தி ஏற்றுக் கொண்டார்.
அதைத் தொடர்ந்து புதிய தலைவரை நியமிப்பது தொடர்பாக ப.சிதம்பரம், கே.வீ.தங்கபாலு, சு.திருநாவுக்கரசர், செல்லக்குமார், ஜெயக்குமார், மாணிக் தாகூர், பீட்டர் அல்போன்ஸ்,எஸ்.விஜயதரணி, எச்.வசந்தகுமார், கராத்தே தியாகராஜன், கே.கோபிநாத் மற்றும் மாவட்டத் தலைவர்களுடன் சோனியா, ராகுல் ஆகியோர் தனித்தனியாக கருத்துகளை கேட்டறிந்தனர்.
தலைவர் பதவிக்கு பலரது பெயர்கள் அடிபட்டன. அவர்கள் அனைவரது மீதும் புகார்கள் குவிந்ததால் காங்கிரஸ் மேலிடம் முடிவெடுக்க முடியாமல் திணறி வருகிறது.
திருநாவுக்கரசரை தலைவராக நியமிக்க ராகுல் முடிவு செய்து விட்டதாக தகவல்வெளியானது. அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இளங்கோவன் ஆதரவு மாவட்டத் தலைவர்கள் சோனியாவுக்கு கடிதம் அனுப்பினர்.
சோனியா அழைப்பு?
பதவியை ராஜினாமா செய்த பிறகு சோனியா காந்தியை சந்திக்க இளங்கோவன் பல முறை முயன்றும் அனுமதி கிடைக்கவில்லை. இந்நிலையில், கடந்த 25-ம் தேதி இரவு அவசர பயணமாக அவர் டெல்லி சென்றார். சோனியா காந்தி அழைப்பின் பேரில் சென்றதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர். ஆனாலும், அவரால் நேற்று இரவு வரை சோனியாவை சந்திக்க முடியவில்லை.
உள்ளாட்சித் தேர்தல் நெருங்கி வருவதால் உடனடியாக தலை வரை நியமிக்க வேண்டிய கட்டாயத்தில் காங்கிரஸ் மேலிடம் உள்ளது. எனவே, கூட் டணி கட்சியான திமுகவுடன் இணக் கமாக செல்லக் கூடிய ஒரு வரை தலைவராக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படு கிறது.
தலைவர் பதவியை கைப்பற்ற தமிழக காங்கிரஸ் தலைவர்கள் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக டெல்லியில் முகாமிட்டுள்ளனர். சோனியா காந்தியை சந்திப்பதற் காக 2 நாட்களாக இளங்கோவன் காத்திருக்கிறார். கடந்த ஒன்றரை மாதங்களாக மாநிலத் தலைவர் இல்லாததால் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிப் பணிகள் முடங்கியுள்ளன. எனவே, உடனடியாக தலைவரை நியமிக்க வேண்டும் அக்கட்சி தொண்டர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.