தமிழகம்

போதைப் பொருள் விற்பனைக்கு உடந்தை: முத்தியால்பேட்டை போலீஸார் 3 பேர் பணி இடமாற்றம்

செய்திப்பிரிவு

பணம் பெற்றுக் கொண்டு, பான் மசாலா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்ய உடந்தையாக இருந்ததாக முத்தியால்பேட்டை போலீஸார் 3 பேர் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையில் மாவா, குட்கா, பான் மசாலா உள்ளிட்ட போதைப் பொருள் நடமாட் டத்தை முற்றிலும் கட்டுப்படுத்த போலீஸ் அதிகாரிகளுக்கு காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பணம் பெற்றுக்கொண்டு மாவா, குட்கா, பான் மசாலா உள்ளிட்ட பொருட் களை சட்ட விரோதமாக விற்பனை செய்ய உடந்தையாக இருந்ததாக முத்தியால்பேட்டை போலீஸார் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து முத்தியால்பேட்டை போலீஸாரி டம் கடந்த ஒரு வாரமாக உயர் போலீஸ் அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தினர்.

இதில், அவர்கள் பான் மசாலா வியாபாரிகளுக்கு உடந்தையாக இருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து இந்த குற்றச்சாட்டில் ஈடுபட்ட 3 போலீஸாரையும் அங்கிருந்து வேறு இடத்துக்கு காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பணி இடமாற்றம் செய்துள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT