தமிழகம்

நீட் தேர்வை எதிர்கொள்ள தமிழக மாணவர்கள் தயார்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

செய்திப்பிரிவு

மருத்துவ நுழைவுத் தேர்வை (நீட்) எதிர்கொள்ள தமிழக மாணவர்கள் தயாராக இருப்பதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

கோவையில் செய்தியாளர்களி டம் நேற்று அவர் கூறியதாவது:

மருத்துவ நுழைவுத் தேர்வை ரத்து செய்வது தொடர்பாக ஏற்கெனவே சட்டம் இயற்றி குடியரசுத் தலைவரின் ஒப்பு தலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அது தொடர்பாக பிரதமரிடம் தமிழக முதல்வர் பேசியிருக்கிறார். மருத்துவ நுழைவுத் தேர்வை ரத்து செய்வது குறித்து பிரதமர் நரேந்திர மோடிதான் முடிவு செய்ய வேண்டும். மருத்துவ நுழைவுத் தேர்வு பிரச்சினையானது இந்திய அளவிலான பிரச்சினை. நீட் தேர்வை எதிர்கொள்ள தமிழக மாணவர்கள் தயாராக உள்ளனர்.

ஆசிரியர் பணி நியமனத்தில் வெயிட்டேஜ் முறையை ரத்து செய்வது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. தமிழ கத்தில் காலியாக உள்ள 1,200 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகி றது.

பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரமாக்குவது குறித்து, தற்போதைய நிதிநிலைக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் பேசப்படும் என்றார்.

SCROLL FOR NEXT