தமிழகம்

வேனில் இன்று சுற்றுப்பயணம்: ஆர்.கே.நகர் தொகுதி மக்களுக்கு முதல்வர் நன்றி தெரிவிக்கிறார்

செய்திப்பிரிவு

ஆர்.கே.நகரில் இன்று சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் முதல் வர் ஜெயலலிதா, வெற்றி பெறச் செய்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறார்.

முதல்வர் ஜெயலலிதா, கடந்தாண்டு இடைத்தேர்தலில் போட்டியிட்ட அதே ஆர்.கே.நகர் தொகுதி யில் களமிறங்கினார். முதல்வரை எதிர்த்து திமுக மற்றும் மக்கள் நலக்கூட்டணி சார்பில் பெண்களே வேட்பாளர்களாக நிறுத்தப்பட் டனர். தேர்தல் முடிந்து முடிவு அறிவிக்கப்பட்ட நிலையில், திமுக வேட்பாளர் சிம்லா முத்துச் சோழனை விட 41 ஆயிரத்து 105 வாக்குகள் அதிகம் பெற்று முதல்வர் ஜெயலலிதா வெற்றி பெற்றார்.

அதே நேரம், அதிமுகவும் கடந்த 32 ஆண்டுகளுக்குப் பின் தொடர்ச்சியாக 2 வது முறை ஆட்சியை பிடித்தது. 6 வது முறை தமிழக முதல்வராக ஜெயலலிதா கடந்த மாதம் 23-ம் தேதி பதவியேற்றார். அமைச்சர்களும் பதவியேற்று, பணிகளை தொடங்கிய நிலையில், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் கட்சியினரை வாக்காளர்க ளுக்கு நன்றி தெரிவிக்கும்படி முதல்வர் உத்தரவிட்டார்.

2 வது முறை வெற்றி

இந்நிலையில், தன்னை வெற்றி பெறச் செய்து தொடர்ச்சியாக 2 வது முறை முதல்வராக்கிய ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர் களை முதல்வர் இன்று சந்திக் கிறார். இன்று மாலை 3.30 மணிக்கு போயஸ் தோட்ட இல்லத்தில் இருந்து பிரச்சார வாகனத்தில் புறப்படும் அவர், ராயபுரம் பகுதி யில் எம்ஜிஆர் சிலை- பெட்ரோல் நிலையம் அருகில் ஆர்.கே.நகரில் மக்களை சந்திக்கிறார்.

அதைத் தொடர்ந்து, சூரிய நாராயண செட்டி தெரு, ஜீவரத்தினம் சாலை சந்திப்பு, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, அருணாச்ச லேஸ்வரர் கோயில் தெரு, காமராஜர் காலனி, சேனியம்மன் கோவில் தெரு, மார்க்கெட் தெரு, வஉசி சாலை சந்திப்பு, இளைய முதலி தெரு, வைத்தியநாதன் பாலம், எண்ணூர் நெடுஞ்சாலை, பழைய மற்றும் புதிய வைத்திய நாதன் சாலை உள்ளிட்ட பகுதிக ளில் வாக்காளர்களைச் சந்தித்து நன்றி தெரிவிக்கிறார்.

பிரச்சாரத்தின் போது, வாக்கு சேகரித்து பேசிய பகுதிகளில், இன்று வேனில் இருந்தபடியே நன்றி தெரிவிப்பார் முதல்வராக பதவியேற்ற பின் ஆர்கே.நகருக்கு வரும் அவரை வரவேற்க, கட்சியினர் கோலாகல ஏற்பாடு களை செய்துள்ளனர்.

SCROLL FOR NEXT