தமிழகம்

நத்தம் அருகே பரிதாபம்: லாரி கவிழ்ந்து 3 பேர் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

நத்தம் அருகே லாரி கவிழ்ந்ததில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாயினர்.

திண்டுக்கல்லில் இருந்து டைல்ஸ் கற்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று ராமநாதபுரம் மாவட் டம், திருவாடானை நோக்கி நேற்று முன்தினம் இரவில் சென்று கொண்டிருந்தது. லாரியை தாடிக் கொம்பைச் சேர்ந்த ராஜப்பன் ஓட்டிச் சென்றார். கிளீனராக பிரகாஷ் உடன் சென்றார். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை கருங்குடியைச் சேர்ந்த ஆரோக்கியம், மேலையூ ரைச் சேர்ந்த காளிதாஸ், இக்னேஸ் ஜோசப், கருங்குடியைச் சேர்ந்த அந்தோணி, ஆயங்குடியைச் சேர்ந்த பிரசாத், பிரவீன்குமார், சிவகங்கை மாவட்டம் வாடி நன்னி யூரைச் சேர்ந்த சுப்பிரமணி ஆகி யோர் லாரியில் பயணம் செய்தனர்.

நேற்று அதிகாலை 2 மணி யளவில் லாரி கொட்டாம்பட்டி சாலையில் உள்ள சம்பைப்பட்டி அருகே சென்றபோது கட்டுப் பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே லாரியில் பயணம் செய்த ஆரோக்கியம்(55), காளி தாஸ்(45), இக்னேஸ் ஜோசப்(35) ஆகியோர் உடல் நசுங்கி பலி யாயினர். அந்தோணி, பிரசாத், பிரவீன்குமார், சுப்பிரமணி ஆகியோர் காயங்களுடன் உயிர் தப்பினர். விபத்து குறித்து நத்தம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT