தமிழகம்

திமுக எம்எல்ஏ அன்பழகனுக்கு பேரவைத் தலைவர் எச்சரிக்கை

செய்திப்பிரிவு

கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும் என திமுக உறுப்பினர் ஜெ.அன்பழகனுக்கு (சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி) பேரவைத் தலைவர் பி.தனபால் எச்சரிக்கை விடுத்தார்.

சட்டப்பேரவையில் நேற்று பட் ஜெட் மீதான விவாதத்தில் திமுக கொறடா அர.சக்கரபாணி (ஒட்டன் சத்திரம்) பேசும்போது, ‘‘பால் உற் பத்தியாளர்களிடம் இருந்து பால் முழுவதையும் ஆவின் நிறுவனம் கொள்முதல் செய்ய வேண்டும்’’ என கோரிக்கை விடுத்தார்.

அதற்கு நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், பால்வளத் துறை அமைச்சர் எஸ்.பி.சண்முக நா தன் ஆகியோர் பதிலளித்தனர். அப்போது குறுக்கிட்ட திமுக உறுப் பினர் ஜெ.அன்பழகன் தன்னை பேச அனுமதிக்க வேண்டும் என்றார்.

அதற்கு அனுமதி மறுத்த பேரவைத் தலைவர் பி.தனபால், ‘‘உங்கள் கட்சி கொறடா பேசிக்கொண்டு இருக்கும்போது நீங்கள் அனுமதி கேட்பது சரியல் ல. அப்படியெனில் கொறடாவை பேச வேண்டாம் என்கிறீர்களா? அவரை அமர வைத்து விட்டு உங்களை பேச அழைக்கலாமா?’’ என்றார்.

அதனை ஏற்காமல் அன்பழகன் மீண்டும் எழுந்து நின்று தனக்கு வாய்ப்பு தருமாறு கேட்டார். அவ ருக்கு ஆதரவாக திமுக உறுப் பினர்களும், எதிராக அதிமுக உறுப்பினர்களும் எழுந்து நின்று கோஷமிட்டனர். இதனால் பேர வையில் கூச்சல் குழப்பம் ஏற்பட் டது.

அப்போது பேசிய எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன், ‘‘அன்பழகன் பேச வேண்டும் என்பதற்காக வாய்ப்பு கேட்கவில் லை. ஒரு விஷயம் தொடர்பாக விளக்கம் கேட்க விரும்புகிறார் . அதற்கு உறுப்பினர்களுக்கு உரிமை உள்ளது. எனவே, அவ ருக்கு அனுமதி வழங்க வேண்டும்’’ என்றார்.

அதனை ஏற்காத பேரவைத் தலைவர், ‘‘அதிமுக உறுப்பி னர்கள் பேசும்போது விளக்கம் கேட்டால் அனுமதி அளிப்பது குறித்து பரிசீலிக்கலாம். ஆனால், தனது கட்சி உறுப்பினர் அதுவும் கொறடா பேசும்போது அன்பழ கன் விளக்கம் கேட்க அனுமதி கேட்கிறார். இதற்கு அனுமதிக்க முடியாது’’ என்றார்.

அப்போது குறுக்கிட்ட எதிர்க்கட் சித் தலைவர் மு.க.ஸ்டாலின், ‘‘அமைச்சர் அளித்த பதிலுக்கு விளக்கம் கேட்கவே அன்பழகன் அனுமதி கேட்கிறார். எனவே, அவ ருக்கு அனுமதி வழங்க வேண்டும்’’ என்றார்.

அதற்கு அனுமதி மறுத்த பேரவைத் தலைவர், ‘‘திமுக உறுப்பினர் அன்பழகனின் நட வடிக்கைகள் வித்தியாசமாக உள்ளன. எதிர்க்கட்சித் தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்கள் மீதும் நான் மரியாதை வைத்துள்ளேன். பேரவையை அமைதியாக நடத்த வேண்டிய கடமை எனக்கு உள்ளது.

எனவே, விதிகளை கடு மையாக அமல்படுத்த வேண்டி யுள்ளது. பேரவைத் தலைவர் அனுமதிக்காதபோதும் அன்பழகன் நின்றுகொண்டு கோஷம் எழுப்பிக் கொண்டு இருக்கிறார். இதனை அனுமதிக்க முடியாது. இனியும் இதுபோன்று அவர் நடந்துகொண் டால் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும் என எச்சரிக்கிறேன்’’ என்றார்.

இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

SCROLL FOR NEXT