தமிழகம்

மதிவாணனை ஆதரித்து விஜயகாந்த் இன்று பிரச்சாரம்

செய்திப்பிரிவு

ஆர்.கே.நகரில் தேமுதிக வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் இன்று பிரச்சாரம் செய்கிறார்.

தேமுதிக தலைவர் விஜய காந்த், கடந்த 22-ம் தேதி சென்னை மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவ மனையில் திடீரென அனுமதிக் கப்பட்டார். வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக அவர் அனுமதிக்கப்பட்டதாக கட்சித் தலைமை அலுவலகம் தெரிவித்தது. 11 நாள் சிகிச்சைக்குப் பிறகு கடந்த 3-ம் தேதி விஜயகாந்த் வீடு திரும்பினார். சில நாட்களாக ஓய்வில் இருந்த அவர், ஆர்.கே.நகர் தொகுதியில் இன்று பிரச்சாரம் செய்கிறார்.

இது தொடர்பாக தேமுதிக தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘ஆர்.கே.நகரில் தேமுதிக வேட்பாளர் ப.மதிவாணனை ஆதரித்து ஞாயிறு மாலை 6 முதல் இரவு 10 மணி வரை விஜயகாந்த் பிரச்சாரம் செய் கிறார். 38, 39, 40,41, 42, 43, 47 ஆகிய வட்டங்களில் வீதி வீதியாக வாக்கு சேகரிக்கிறார்’ என கூறப்பட்டுள்ளது.

‘‘விஜயகாந்த்தின் பிரச்சார அறிவிப்பு தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மேலும் சுறுசுறுப்புடன் வாக்குசேகரிக்கும் பணியில் ஈடுபடுவர்’’ என தேமுதிக மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT