நாமக்கல் மாவட்டம் வேலகவுண் டம்பட்டி கவுண்டர் தெருவைச் சேர்ந்த செல்வம்-சுமதி தம்பதியின் மகள் காவியா(17). ராசிபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த இவர், கடந்த 15-ம் தேதி வீட்டில் தனியாக இருந்தபோது, கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டார்.
காவியா கொலை வழக்கு தொடர் பாக அவரது தந்தை செல்வம்(46), அத்தை வெண்ணிலா(52), சேந்த மங்க லம் அருகே வெண்டாங்கி யைச் சேர்ந்த சங்கர்குமார்(27) ஆகிய 3 பேரையும் போலீஸார் கைது செய்தனர். கருணா என்பவ ரைத் தேடி வருகின்றனர்.
கொலை சம்பவம் குறித்து போலீஸார் கூறியதாவது:
செல்வம் அரசுப் பள்ளி ஆசி யராக பணியாற்றி கடந்த ஆண்டு பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். சுமதி வேலகவுண்டம்பட்டியில் மருந்துக் கடை வைத்துள்ளார். இருவரும் கருத்து வேறுபாடு கார ணமாக சில ஆண்டுகளாக தனித் தனியே வசிக்கின்றனர்.
இருவருக்கும் இடையேயான விவாகரத்து வழக்கு நாமக்கல் நீதிமன்றத்தில் நடைபெற்று வரு கிறது.
இந்நிலையில் கடந்த ஆண்டு காவியா, தன்னை தந்தை செல்வம் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக வேலகவுண்டம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் செல்வம் கைது செய்யப்பட்டார்.
மகளை தனக்கு எதிராக தூண் டி விட்டதாக செல்வம், அவரது சகோதரி பேளுக்குறிச்சியைச் சேர்ந்த வெண்ணிலா என்பவரி டம் வேதனை தெரிவித்துள்ளார். இதனால் தன்னுடைய தம்பிக்கு இடையூறு செய்துவரும் அவ ருடைய மனைவி சுமதி, மகள் காவியா இருவரையும் கொலை செய்ய திட்டமிட்டு, சேந்தமங்கலம் அருகே வெண்டாங்கியைச் சேர்ந்த சங்கர்குமார் என்பவரை வெண்ணிலா அணுகியுள்ளார்.
சங்கர்குமார் கடந்த 15-ம் தேதி காலை குடிநீர் சுத்திகரிப்பு இயந்தி ரம் பழுது நீக்கும் நபர் என கூறிக் கொண்டு, கோவையைச் சேர்ந்த நண்பர் கருணா(25) என்பவருடன் சுமதி வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது வீட்டில் தனியாக இருந்த காவியாவை இருவரும் பாலியல் பலாத்காரம் செய்து, பிறகு கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். கைதான 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.