சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்த ரவுடிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை வில்லிவாக்கம் பகுதியில் வசித்து வந்த 7-ம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமியை, கடந்த 2014-ல் அப்பகுதியைச் சேர்ந்த ரவுடி ரவி(44) என்ற மாட்டு ரவி பாலியல் பலாத்காரம் செய்தார்.
இதையடுத்து ரவியை போலீஸார் கைது செய்தனர்.மேலும் ரவி மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த சென்னை மகளிர் நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட ரவிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
இந்த வழக்கில் குற்றவாளிக்கு சிறை தண்டனை பெற்றுத் தந்த போலீஸாருக்கு சென்னை பெருநகர போலீஸ் ஆணையர் ஜார்ஜ் பாராட்டு தெரிவித் துள்ளார்.