திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையில் ‘கற்கால தொழிற்கூடங்கள்’ அதிகளவில் காணப்படுவதாக, செங்கத்தைச் சேர்ந்த தொல்லியல் ஆர்வலர் பிரேம் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “விலங்குகளிடமிருந்து பாது காத்துக் கொள்ளவும், உணவுக்காக வும் விலங்குகளை வேட்டையாட கற்கருவிகளை ஆதிகால மனிதர் கள் பயன்படுத்தி வந்துள்ளனர். கற்கோடாரி, கற்கத்தி உள்ளிட்ட பல்வேறு வகையான ஆயுதங்களை தயாரித்து வேட்டைக்குப் பயன் படுத்தி உள்ளனர். தங்களது குடியி ருப்புப் பகுதியிலேயே தொழிற் கூடங்களை ஏற்படுத்தி, கற்கருவி ஆயுதங்களை செய்து வந்துள் ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையில் உள்ள மேல்பட்டு கிராமத்தில், கற்கால தொழிற்கூடங்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. ஜொனை மடுவு என்ற இடத்தில் உள்ள பாறையின் மீது 15 செ.மீ., அகலத்தில் 1 அடி நீளத்துக்கு 11 கற்குழிகள் உள் ளன.
அதேபோல், சிறிது தொலைவில் உள்ள பாறையின் மீது 2 கற்குழிகள் காணப்படுகின்றன. மேலும், கல் ஆயுதங்களை தயாரிப்பதற்காக, அவற்றைப் பாறையில் தேய்த்த தடயங்கள் உள்ளன. அந்தப் பகுதி யில் ஏராளமான கல் ஆயுதங்களும் உள்ளன.
இந்த இடங்களை கன்னி (தெய் வம்) கால் நீட்டி உட்கார்ந்த இடம் என்றும், பீமன் கால் பதித்த இடம் என்றும் மலைவாழ் மக்கள் கூறுகின் றனர். மேலும் அவர்கள், கல் ஆயுதங் களை சேகரித்து, அவற்றை மரத்தின் மீது சாய்த்து வைத்து வழிபாடு செய்கின்றனர். இந்த தொழிற்கூடங் கள் 4 ஆயிரம் ஆண்டுகள் பழமை யானவை என தெரிய வருகிறது” என்றார்.