அறவழியில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது காவல் துறை யினர் நடத்திய தாக்குதல் குறித்து ஆராய நீதிபதி ஹரி பரந்தாமன் தலைமையில் உண்மை அறியும் குழுவை மக்கள் நலக் கூட்டியக்கம் அமைத்துள்ளது.
இது தொடர்பாக ம.ந.கூட்டியக் கத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆகியோர் நேற்று வெளியிட்ட கூட்டறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க வலியுறுத்தி கடந்த 17-ம் தேதி முதல் மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் அமைதியான முறையில் போராடி வந்தனர். இந்த எழுச்சிப் போராட்டம் தந்த நிர்பந்தத்தின் விளைவாக தமிழக அரசு அவசரச் சட்டம் கொண்டு வந்தது. சட்டப்பேரவையில் சட்டமும் நிறைவேற்றியுள்ளது.
ஒரு வாரம் அமைதியாக போராடியவர்கள் மீது காவல் துறை யினர் வன்முறையை கட்டவிழ்த்து விட்டது ஜனநாயகத்துக்கு எதி ரானது. காவல் துறையினரே வன்முறையிலும் ஈடுபட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை காவல்நிலையத்தில் அடைத்து வைத்து கடுமையாகத் தாக்கியதாக வும் கூறப்படுகிறது.
ஜனநாயகத்துக்கும், மனித உரிமைகளுக்கும் விரோதமான இந்தச் செயல் கடும் கண்டனத் துக்குரியது. காவல் துறையினர் நடத்திய தாக்குதல் குறித்து உண் மைகளை ஆராய ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஹரி பரந்தாமன் தலைமையில் உண்மை அறியும் குழு அமைக்கப் பட்டுள்ளது.
தமிழக அரசு அவசரச் சட்டம் பிறப்பித்த பிறகு தமிழ கத்தில் சில இடங்களில் நடை பெற்ற ஜல்லிக்கட்டில் ஒரு காவலர் உள்ளிட்ட 4 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண் டும். உரிய முறையில் ஜல்லிக்கட்டு நடத்த மாநில அரசு வழிகாட்ட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.