தமிழகம்

அவசர சட்டம் இயற்ற உதவிய பிரதமருக்கு நன்றி: முதல்வர்

செய்திப்பிரிவு

ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் இயற்ற உதவிய பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கக்கோரி கடந்த 19-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினேன். இதையடுத்து, குடியரசுத் தலைவரிடமிருந்து உரிய ஆலோசனை பெறப்பட்டு தமிழக அரசு அவசர சட்டம் இயற்றியது. இதைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டு திருவிழா வழக்கமான பாரம்பரிய உற்சாகத்துடன் தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளது.

இத்தருணத்தில் ஜல்லிக்கட்டு அவசர சட்டம் இயற்ற உதவிய பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக மக்களின் சார்பிலும், தமிழக அரசின் சார்பிலும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று முதல்வர் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT