தமிழகம்

விரிவுரையாளர் தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பம்

செய்திப்பிரிவு

மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மற்றும் அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் விரிவுரையாளர், இளநிலை விரிவுரையாளர், முதுநிலை விரிவுரையாளர் பணிகளில் 272 காலியிடங்களை நிரப்புவதற்காக செப்டம்பர் 17-ம் தேதி அன்று போட்டித்தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்கு தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங் கியல், வரலாறு, புவியியல் பாடங்களில் முதுகலை பட்டமும், எம்எட் பட்டமும் பெற்றிருப் பவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப படிவங்கள் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் வழங்கப்படுகின்றன. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை ஜூலை 30-ம் தேதி மாலை 5.30 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

SCROLL FOR NEXT