ஓபிஎஸ் அணியின் இப்தார் நோன்பு திறப்பு தொடர்பாக அதிமுக (புரட்சித் தலைவி அம்மா) கட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
அதிமுக (புரட்சித்தலைவி அம்மா) கட்சி சார்பில், அவைத்தலைவர் இ.மது சூதனன் தலைமையில் இன்று 21-ம் தேதி மாலை 5 மணிக்கு, அசோகா ஓட்டலில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. இதில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கிறார்.
மேலும், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், மூவேந்தர் முன்னணி கழக தலைவர் ந.சேதுராமன், சுன்னத் ஜமா அத் ஐக்கிய பேரவை தலைவர் மேலை நாசர், தமிழ்மாநில கட்சியின் தலைவர் பால் கனகராஜ் மற்றும் பலர் பங்கேற்கின்றனர்.