மதுக்கடைகளை மூட வலியுறுத்தி சென்னையில் போராட்டம் செய்த காந்தியவாதி சசிபெருமாள் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் காந்தியவாதி சசிபெருமாள் தனது ஆதரவாளர்களுடன் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தி வருகிறார். சென்னையில் நுங்கம்பாக்கம், சூளைமேடு உள்ளிட்ட பகுதிகளில் போராட் டம் நடத்தியபோது, அவரை போலீஸார் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.
இந்நிலையில், சசிபெருமாள் தனது ஆதரவாளர்களுடன் சென்னை வள்ளுவர் கோட்டத்துக்கு சனிக்கிழமை காலை வந்தார். மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அவர் போராட்டத்தில் ஈடுபட்டார். அனுமதியின்றி போராட்டம் நடத்தியதால் அவரை போலீஸார் கைது செய்தனர்.