ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்தக் கோரி எஸ்ஆர்எம் வேந்தர் பச்சமுத்து தாக்கல் செய்த மனுவை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத் தில் மருத்துவப் படிப்புக்கு இடம் வாங்கித் தருவதாக கூறி வேந்தர் மூவீஸ் மதன் பல மாணவர்களின் பெற்றோரிடம் கோடிக்கணக்கில் பணம் வசூலித்துவிட்டு தலை மறைவாகியுள்ளார். இந்த வழக்கில் எஸ்ஆர்எம் பல்கலைக்கழக வேந்தர் பச்சமுத்து கைதாகி தற்போது ஜாமீனில் உள்ளார். அவர் தனது பாஸ்போர்ட்டை விசாரணை அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும். மறுஉத்தரவு வரும் வரை, விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனை களுடன் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தனக்கு விதிக்கப்பட்ட ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்தக் கோரி, மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் பச்சமுத்து மனு தாக்கல் செய்தார். முதன்மை அமர்வு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் இந்த மனுவை நேற்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.