தமிழகம்

இலங்கைத் தமிழர் பிரச்சினையில் இந்தியா தனி தீர்மானம்: பிரதமரிடம் திமுக வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக ஐ.நா மனித உரிமை ஆணையத்திடம் இந்தியா தனி தீர்மானம் அளித்திட வேண்டும் என திமுக வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக இன்று (வெள்ளிக்கிழமை) டி.ஆர்.பாலு தலைமையில் தி.மு.க நாடாளுமன்ற குழு உறுப்பினர்கள் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்தனர்.

அப்போது, இலங்கையில் 2008-2009-ஆம் ஆண்டில் நடைபெற்ற போரின்பொது போர் குற்றம் புரிந்தது

தொடர்பாக ஐக்கிய நாடுகள் தலைமையிலான தன்னிச்சையான மற்றும் சர்வதேச விசாரணை நடத்த ஆதரவு அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

மேலும், 2008 டிசம்பர் மாதம் முதல் 2009-ஆம் ஆண்டு மே மாதம் வரை இலங்கை ராணுவத்தினரால் இழைக்கப்பட்ட போர் குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்த ஐ.நா-வின் கீழ் இயங்கும் தன்னிச்சையான மற்றும் நம்பகத்தன்மை வாய்ந்த சர்வதேச விசாரணை அமைப்பை உருவாக்க வேண்டும்.

இலங்கையில் தொடரும் மனித உரிமை மீறல்கள் குறிப்பாக அரசுக்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் பாதிக்கப்படுவது தொடர்பாக தொடர்ந்து

கண்காணிக்க ஐக்கிய நாடுகள் சபை நடைமுறை ஒன்றை அமைக்க வேண்டும் என்ற 2 பரிந்துரைகளை எடுத்துரைத்தனர்.

மார்ச் மாதம் 3-ஆம் தேதி ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் இந்தியா முன் நின்று தனி தீர்மானம் ஒன்றை கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்துவதாக திமுக எம்.பி.க்கள் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT