கடந்த சில ஆண்டுகளாகத் தொடர்ந்து அழிக்கப்பட்டு வரும் சுவரோவியங்களைப் பாதுகாக்கும் புதிய முயற்சியில் சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியும், ஆசியப் பண்பாட்டு ஆராய்ச்சி மையமும் ஈடுபட்டுள்ளன.
தமிழக கோயில்களில் இடம்பெற்றுள்ள சுவரோவியங்கள் தனித்தன்மை வாய்ந்தவை. புராதன வரலாற்று பெருமைகளை சுமக்கும் இந்த ஓவியங்கள் எந்தவிதமான வண்ணக் கலவையும் இன்றி இயற்கையான இலைச் சாறுகளையும், கடுக்காய் உள்ளிட்ட பொருட்களையும் பயன்படுத்தி வரையப்பட்டவை.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இது போன்ற சுவரோவியங்கள் காஞ்சிபுரம் கைலாசநாதர் ஆலயம், ஏகாம்பரநாதர் ஆலயம், வரதரா ஜப் பெருமாள் ஆலயம், திருப்பருத்திக்குன்றத்தில் சமணர் ஆலயத்தில் உள்ள ஓவியம், திருப்புலவணம் வியாக்புரீஸ்வர் ஆலயத்தில் உள்ள ஓவியங்கள் உட்பட காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமான சுவரோவியங்கள் காணப்படு கின்றன. திருப்புலிவனம் போன்ற இடங்களில் உள்ள சுவரோவியங்கள் செயற்கை வர்ணம் பூசி அழிக்கப்பட்டுவிட்டன.
இந்நிலையில் இந்தச் சுவரோவியங்களைப் பாதுகாப்பது குறித்தும், வரைவது குறித்தும் ஆசியப் பண்பாட்டு ஆராய்ச்சி மையம் அவ்வப்போது முயற்சிகளை எடுத்து வருகிறது. இம்மையம் காஞ்சிபுரத்தில் சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியுடன் இணைந்து ஓவியம் படிக்கும் மாணவர்களுக்கும், ஓவியர்களுக்கும் சுவரோவியம் குறித்த பயிற்சியை அளித்தன. இதில் சென்னை, புதுச்சேரி, மாமல்லபுரம் போன்ற பகுதிகளில் ஓவியக் கலை படிக்கும் மாணவர் கள், ஓவியர்கள் உட்பட பலர் பங் கேற்றனர். இவர்களுக்கு தென் னிந்தியாவின் பல்வேறு பகுதி களில் இருந்து வந்த ஓவியக் கலை பாதுகாப்பாளர்கள் பயிற்சி அளித்தனர். இவர்களில் பலருக்கு சுவரோவியங்களை வரைவது குறித்த பிரத்தியேகப் பயிற்சியும் அளிக்கப்பட்டது.
இது குறித்து ஆசியப் பண்பாட்டு ஆராய்ச்சி மையத்தின் ஆராய்ச்சி யாளர் வளவன், பேராசிரியர் பெரியசாமி ஆகியோரிடம் கேட்டபோது, ’சுவர் ஓவியங்களை வரைவது குறித்து பயிற்சி அளித்தால், அவர் களுக்கு அவற்றைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணமும் தானாக வரும். சுவரோவியங்களைப் பொறுத்தவரை இருக்கும் தன்மை யிலேயே, உள்ளது உள்ளபடி அப்படியே பாதுகாக்க வேண்டும். அவற்றின் மேல் வண்ணக் கலவை களைக் கொண்டு புதிதாக வரையக் கூடாது. அந்த ஓவியங்கள் இயற்கையான பொருட்களைக் கொண்டு வரையப்பட்டுள்ளன. அதன் தன்மை மாறாமல் பாதுகாப்பது அவசியம்’ என்றனர்.