திருவண்ணாமலை கிரிவலப் பாதை விரிவாக்கப் பணி தொடர்பாக ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற மூத்த ஐஎப்எஸ் (இந்திய வனப்பணி) அதிகாரி தலை மையில் குழு அமைக்கப்படும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் நேற்று உத்தர விட்டுள்ளது.
திருவண்ணாமலையில் கிரி வலப் பாதை விரிவாக்கப் பணி யில் மரங்கள் வெட்டப்படுவ தாக ‘தி இந்து’ நாளிதழில் வெளி யான செய்தி அடிப்படையில், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வு, தாமாக முன் வந்து, வழக்காக ஏற்றுக்கொண்டு விசாரணை நடத்தி வருகிறது. இதில், கிரிவலப் பாதை விரிவாக்கப் பணிக் கும், அப்பணிக்காக மரங்களை வெட்டவும் இடைக்காலத் தடை விதித்து பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையில், தடையை மீறி மரங்கள் வெட்டப்படுவதை தடுக்கக் கோரி திருவண்ணாமலையைச் சேர்ந்த ஜெ.முகிலன் என்பவரும், மரங்களை வெட்டாமல் சாலை விரிவாக்கத் திட்டத்தை செயல் படுத்தக் கோரி திருவண்ணாமலை யைச் சேர்ந்த பி.கே.தனஞ்செய னும், சோனகிரி மலையில் உள்ள மரங்கள், மூலிகைச் செடிகள் மற்றும் குளங்களை பாதிக்காமல் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த எஸ்.கிருஷ்ணகுமாரும் தனித்தனியே மனுதாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்கள் அமர்வின் நீதித் துறை உறுப்பினர் நீதிபதி பி.ஜோதிமணி, தொழில்நுட்ப உறுப்பினர் பி.எஸ்.ராவ் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசுத் தரப்பு சிறப்பு வழக்கறிஞர் அப்துல் சலீம் தனது பதவியை ராஜினாமா செய்துள் ளார். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரும் பணியிட மாற்றம் செய் யப்பட்டுள்ளார். அதனால் இப் போதைக்கு எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்று கூறிய அமர்வின் உறுப்பினர்கள், கிரிவலப் பாதை விரிவாக்கப் பணிக்கு ஏற்கெனவே விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை தொடரும். இப் பணிக்காக சோனகிரி வனப் பகுதியில் மரங்களை வெட்ட அனுமதிக்க முடியாது. இந்த பணியை ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற மூத்த ஐஎப்எஸ் அதிகாரி தலைமையில் குழு அமைக் கப்படும். அவர்கள் அளிக்கும் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்படும் விவரங்கள் அடிப்படையில், வெட் டப்பட வேண்டிய மரங்களின் எண் ணிக்கையை வெகுவாக குறைத்து, திட்டத்தை நிறைவேற்றுவதற்கான உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று உத்தரவிட்டனர்.
மனு மீதான விசாரணை ஆகஸ்ட் 17-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.