தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள் 7 பேர் நீக்கப்பட்டு, புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர்.
இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘காங்கிரஸ் மாவட் டத் தலைவர் பொறுப்பில் இருந்து பூவை பி.ஜேம்ஸ், வெங்கடாச்சலம், எஸ்.ராஜ்குமார், கே.ராம்நாத், எஸ்.கே.டி.பி. காமராஜ், வி.பாலையா, கே.டி.ராஜாகுமாரவேல் ஆகியோர் நீக்கப்படுகின்றனர். அவர்களுக்கு பதிலாக ஜெ.பாலமுருகன் (திரு வள்ளூர் தெற்கு), கே.தென்னரசு (திருப்பூர் புறநகர்), டி.சொக்க லிங்கம் (நாகை வடக்கு), எஸ்.பழனி நாடார் (திருநெல்வேலி மேற்கு), டி.எல்.உமாபதி சிவன் (திருநெல்வேலி மாநகர்), ஆர்.ராதா கிருஷ்ணன் (கன்னியாகுமரி), எஸ்.நாராயணமூர்த்தி (கிருஷ்ண கிரி) ஆகியோர் புதிய மாவட்ட பொறுப்பாளர்களாக நியமிக்கப் பட்டுள்ளனர். இவர்களுக்கு கட்சி யினர் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்’ என்று கூறி யுள்ளார்.
சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 41 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் விளவங்கோடு, கிள்ளியூர், குளச் சல், நாங்குநேரி, முதுகுளத்தூர், தாராபுரம் (தனி), உதகமண்டலம், காரைக்குடி ஆகிய 8 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. மாவட்டத் தலைவர்கள் தங்கள் தொகுதிகளில் தேர்தல் பணியாற்றவில்லை என தோல்வி அடைந்த சில வேட்பாளர் கள் மட்டுமின்றி, வெற்றி பெற்ற வேட் பாளர்களும் புகார் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் மாவட் டத் தலைவர்கள் 7 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.
இதில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் ஆதரவாளர் வெங்கடாச்சலம் (திருப்பூர் புறநகர்), முன்னாள் மாநிலத் தலை வர் கே.வீ.தங்கபாலுவின் ஆதர வாளர் கே.டி.ராஜாகுமாரவேல் (கிருஷ்ணகிரி) ஆகியோரும் அடங்குவர். புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்டப் பொறுப்பாளர்கள் 7 பேரும் இளங்கோவனின் ஆதர வாளர்கள் என்பது குறிப் பிடத்தக்கது.
இதுகுறித்து காங்கிரஸ் நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகு வேட்பாளர்கள், கட்சித் தொண்டர் களிடம் இருந்து ஏராளமான புகார் கள் வந்தன. அதன் அடிப்படை யில் 7 பேர் மீது இளங்கோவன் நட வடிக்கை எடுத்துள்ளார். திருப்பூர் புறநகர் மாவட்டத் தலைவர், அவரது மாவட்டத்துக்குட்பட்ட தாராபுரம் தொகுயில் எந்தப் பணியும் செய்யவில்லை. அது போல கன்னியாகுமரியில் காங் கிரஸ் வெற்றி பெற்றாலும் கிழக்கு மாவட்டத் தலைவர் வி.பாலையா மீது ஏராளமான புகார்கள் வந்ததால் அவரும் நீக்கப்பட்டுள்ளார்’’ என்றார்.
காங்கிரஸ் விளவங்கோடு, கிள்ளியூர், குளச்சல், நாங்குநேரி, முதுகுளத்தூர், தாராபுரம் (தனி), உதகமண்டலம், காரைக்குடி ஆகிய 8 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.