தமிழகம்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது அதிகரிப்பு

எஸ்.சசிதரன்

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, ஆன்லைனில் (இணைய வழி) விண்ணப்பிக்கும் மனு செய்யும் திட்டத்துக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

தமிழகத்தில் வா க்காளர் பட்டியலில் புதிதாக பெயர்களைச் சேர்ப்பதற்கான பணிகள் கடந்த 1-ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதற்காக, மாநகராட்சி அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்களில் பூர்த்தி செய்யப்பட்ட மனுக்களை பொதுமக்கள் அளித்து வருகின்றனர்.

அதுபோல், முன்னெ ப்போதும் இல்லாத வகையில் ஆன்லைனிலும் ஏராளமானோர் பெயர் சேர்ப்புக்கான மனுக்களை அளித்து வருகின்றனர். இத ற்காக தனியார் இணைய மையங்களின் உரிமையாளர்களுக்கு, வாக்காளர் பெயர் சேர்ப்புப் பணி தொடர்பான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கான நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண் குமார், தமிழகத்தில் ஆன்லைன் மூலம் வெறும் 7 சதவீதம் விண்ணப்பங்களே வந்து ள்ளதாக வருத்தத்துடன் கூறினார். கேரளத்தில் 70 சதவீதமாகவும், ஆந்திரத்தில் 40 சதவீதமாகவும் இருப்பதாக சுட்டிக்காட்டிய அவர், இதன் காரணமாகவே, இணைய மையங்களில் ரூ.10 செலுத்தி பெயர் சேர்ப்புக்கு விண்ணப்பிக்கும் திட்டத்தை அறிமு கப்படுத்தியதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில், பெயர் சேர்ப்புப் பணி 1-ந் தேதி தொடங்கியது முதல் இணைய மையம் மூலமாகவும், தனிப்பட்ட முறையிலும் அக்.6-ம் தேதி வரை 11 ஆயிரம் மனுக்கள் ஆன்லைனில் (www.elections.tn.gov.in/eregistration) வந்திருப்பது தெரியவந்துள்ளது. இது தேர்தல் துறையினருக்கு மகிழ்ச்சியை ஏற்படு த்தியுள்ளது.

SCROLL FOR NEXT