தமிழகம்

ஈரோட்டில் அதிருப்தியாளர்கள் புதிய கட்சி தொடக்கம்

செய்திப்பிரிவு

அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா பொறுப்பேற்றதையடுத்து ஈரோட்டைச் சேர்ந்த வக்பு வாரிய உறுப்பினர் எஸ்.ஏ.பாரூக், ஜெ.பேரவை இணைச் செயலாளர் கவுரிசங்கர், முன்னாள் ஒன்றிய தலைவர் தமிழ்செல்வி உள்ளிட்டோர் அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்தனர். தொடர்ந்து நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஒன்றிணைந்து சென்னை சென்று ஜெ.தீபாவைச் சந்தித்து ஆதரவு தெரிவித் தனர்.

இந்நிலையில், ஜெ. தீபாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஈரோட்டில் புதிய கட்சி மற்றும் கொடி, சின்னம் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அதிமுகவில் இருந்து விலகிய கவுரிசங்கர், எஸ்.ஏ.பாரூக் உள்ளிட்ட தீபா ஆதரவாளர்கள் பங்கேற்றனர்.

எம்.ஜி.ஆர். ஜெயலலிதா அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற புதிய கட்சியைத் தொடங்கிய நிர்வாகிகள் கட்சிக்கு புதிய கொடி மற்றும் சின்னத்தை அறிமுகப்படுத்தினர்.

பின்னர் நடந்த கூட்டத்தில், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் கொள்கை கோட்பாடுகளை காப்பாற்ற எம்.ஜி.ஆர். ஜெயலலிதா அதிமுகவுக்கு தலைமை ஏற்க ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவை அழைக்கிறோம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

SCROLL FOR NEXT