தமிழகம்

நெல்லையில் இதமான காலநிலை சேர்வலாறு அணையில் 23 மி.மீ. மழை

செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று பகலில் வெயில் அதிகமின்றி இதமான காலநிலை நிலவியது. சேர்வலாறு அணையில் 23 மி.மீ. மழை பெய்தது. மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக அணைப்பகுதிகளிலும் பிறஇடங்களிலும் லேசான மழை பெய்து வருகிறது.

மழை அளவு

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சேர்வலாறு அணைப்பகுதியில் 23 மி.மீ. மழை பதிவாகி இருந்தது. பிற இடங்களில் பெய்த மழையளவு (மி.மீட்டரில்): பாபநாசம்- 22, மணிமுத்தாறு- 5, ராமநதி- 2, அம்பாசமுத்திரம்- 3, சேரன்மகாதேவி- 1, நாங்குநேரி- 2, பாளையங்கோட்டை- 2, தென்காசி- 3.20, திருநெல்வேலி- 1.20.

அணைகள் நிலவரம்

143 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட பாபநாசம் அணையில் நீர்மட்டம் நேற்றுமுன்தினம் 50.30 அடியாக இருந்தது. நேற்று 1 அடி உயர்ந்து 51.75 அடியானது. அணைக்கு விநாடிக்கு 744.68 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 104.75 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது.

118 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 49.38 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 144 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 150 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டு இருந்தது. 156 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட சேர்வலாறு அணை நீர்மட்டம் நேற்றுமுன்தினம் 75.49 அடியாக இருந்தது. நேற்று 1.54 அடி உயர்ந்து 77.03 அடியாக இருந்தது.

குற்றாலத்தில் குளிர்காற்று

குற்றாலத்தில் நேற்று பகல் முழுக்க வெயில் தலைகாட்டவில்லை. குளிர் காற்று வீசியதால் இதமான சூழ்நிலை இருந்தது. அருவிகளில் தண்ணீர் வரத்து குறைவாகவே இருந்தது. பிரதான அருவியில் பாறையை ஒட்டி லேசாக தண்ணீர் விழுந்தது.

SCROLL FOR NEXT