தமிழகம்

பேரறிவாளனுக்கு பரோல்: ஸ்டாலின் கோரிக்கை

செய்திப்பிரிவு

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண் டனை பெற்ற பேரறிவாளனுக்கு பரோல் வழங்குவது குறித்து தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் இப் பிரச் சினையை எழுப்பிய அவர் பேசிய தாவது:

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு வேலூர் மத்திய சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு பரோல் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசு நிராகரித்துள்ளது. இந்த வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் உள்ளிட்டோரை விடு தலை செய்ய வேண்டும் என கடந்த 2-3-2016-ல் சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழக அரசின் தலைமைச் செய லாளர் மூலம் மத்திய உள்துறை செயலாளருக்கு கடிதமும் அனுப்பப் பட்டது. ஆனால், தற்போது பேரறி வாளனுக்கு பரோல் வழங்க முடி யாது என தமிழக அரசு மறுத்துள் ளது ஏன்? சஞ்சய் தத் போன்றவர் களுக்கு பரோல் வழங்கப்பட்ட முன்னுதாரணத்தை கருத்தில் கொண்டு பேரறிவாளனுக்கு பரோல் வழங்குவது குறித்து தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும்.

இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

இதற்கு பதிலளித்த பேரவைத் தலைவர் பி.தனபால், ‘‘இந்தப் பிரச்சினை தொடர்பாக நீங்கள் கொடுத்துள்ள கடிதம் எனது பரிசீலனையில் உள்ளது. இது குறித்து பின்னர் முடிவெடுக்கப் படும்’’ என்றார்.

இதே பிரச்சினையை கொங்கு இளைஞர் பேரவை தலைவர் உ.தனியரசு, முக்குலத்தோர் புலிப் படை தலைவர் கருணாஸ் ஆகியோரும் எழுப்பினார்கள்.

SCROLL FOR NEXT