தமிழகம்

நெல்லையில் தெருவுக்கு புதுமைப்பித்தன் பெயர்: சிறுகதை உலகின் முடிசூடா மன்னருக்கு பெருமை

செய்திப்பிரிவு

திருநெல்வேலியில் புதுமைப்பித் தன் வாழ்ந்ததன் அடையாளமாக, வண்ணார்பேட்டை சாலைத் தெருவுக்கு ‘புதுமைப்பித்தன் வீதி’ என்று பெயர் சூட்டப்பட்டு, பெயர்ப் பலகையை மாநகராட்சி மேயர் நேற்று திறந்து வைத்தார்.

தமிழ் சிறுகதை உலகின் முடிசூடா மன்னராக திகழ்ந்தவர் எழுத்தாளர் புதுமைப்பித்தன். கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப் புலியூரில் ஏப்ரல் 25, 1906-ல் பிறந்தவர். இவரது இயற்பெயர் சொ.விருத்தாசலம். பிற்காலத்தில் புதுமைப்பித்தன் என்று பெயரை மாற்றிக்கொண்டார்.

இளமைப் பருவத்தில் திருநெல் வேலி வண்ணார்பேட்டையில் உள்ள சாலைத் தெருவில் வாழ்ந் தார். 1948 ஜூன் 30-ல் அவர் மறைந்தா லும் அவரது எழுத்துகள் இன்னும் புதுமையாகவே திகழ்கின்றன. 97 சிறுகதைகள், ‘சிற்றன்னை’ என்ற குறுநாவல், ‘அன்னை இட்ட தீ’ என்ற முற்றுப்பெறாத நாவல் என்று தன் வாழ்வின் சாட்சியாக புதுமைப் பித்தன் இன்றும் எழுத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்.

திருநெல்வேலியில் புதுமைப் பித்தன் வாழ்ந்ததன் அடையாளமாக வும், அவரது எழுத்தாற்றலை வரும் தலைமுறைக்கு உணர்த்தும் வகையிலும். அவரது பெயரில் நூலகம், வண்ணார்பேட்டை சாலைக்கு புதுமைப்பித்தன் சாலை என்று பெயர்சூட்ட வேண்டும் என, தமிழ் ஆர்வலர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். ‘தி இந்து’வில் கடந்த ஜூன் 30-ம் தேதி இதுகுறித்து விரிவான செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

கடந்த வாரம் நடைபெற்ற திரு நெல்வேலி மாநகராட்சியின் கடைசி கூட்டத்தில், ‘வண்ணார்பேட்டை யில் உள்ள சாலை தெருவுக்கு புதுமைப்பித்தன் வீதி என்ற பெயர் சூட்டப்படும்’ என்ற சிறப்பு தீர்மானத்தை, மேயர் இ.புவனேஸ் வரி கொண்டுவந்தார். இதன்படி, சாலைத் தெருவுக்கு ‘புதுமைப் பித்தன் வீதி’ என்று பெயர் சூட்டி, அதற்கான பெயர்ப் பலகையை மேயர் திறந்து வைத்தார்.

SCROLL FOR NEXT