முகமதுபின் துக்ளக் ஆட்சியை பிரதமர் மோடி நினைவுபடுத்துவ தாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி தெரிவித்தார்.
திருநெல்வேலியில் 3 நாட்கள் நடைபெறும் அக்கட்சியின் மாநில சிறப்பு மாநாட்டை நேற்று தொடங்கி வைத்து அவர் பேசியதாவது: உலகம் முழுவதும் எதிர்பார்ப்பு களை மீறி அமெரிக்க அதிபராக ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ளார். இது இந்தியா போன்ற நாடுகளில் எதிர்மறையான தாக்குதல்களை நிகழ்த்தக்கூடும். அதை எதிர் கொள்ள இந்தியா தயாராக இருக்க வேண்டும்.
இந்திய பொருளாதாரம் தொடர்ந்து தேக்க நிலையில் இருக்கிறது. கடந்த 28 மாதங்களாக ஏற்றுமதி முடங்கி இருக்கிறது. அனைத்து தொழில்களும், விவசாய மும் நெருக்கடியில் உள்ளன. கடந்த 2 ஆண்டுகளில் விவசாயிகள் தற்கொலை 26 சதவீதம் அதிகரித்து இருக்கிறது.
நாட்டின் பொருளாதாரம் 90 சத வீதம் பணப் பரிமாற்றம் தொடர்பாக இருக்கிறது. இணையதளம் மூலம் பணப் பரிமாற்றம் என்பது 5 சத வீதத்துக்கும் குறைவு. தற்போது 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொருட்களை வாங்க சில்லறை இல்லை. வங்கிகளிலும், ஏடிஎம்களி லும் மக்கள் காத்திருக்கின்றனர். இந்தியாவில் 3-ல் 2 பேருக்கு வங்கி களில் கணக்கு இல்லை. 90 சதவீதம் பேருக்கு சேமிப்புகள் இல்லை.
கறுப்பு பணம் வெளிநாட்டு வங்கிகளிலும், வெளிநாட்டு பண மாகவும் உள்ளது. தீவிரவாதிகள் ரூபாய் நோட்டுகளாக பணப் பரிமாற்றத்தை செய்யவில்லை. ஆன்லைன் மூலம் பணப் பரிமாற்றம் செய்கின்றனர். அரசியல், நிர்வாக ரீதியாக லஞ்ச, ஊழல்வாதிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் ஊழலை ஒழிக்க முடியாது. தற்போது ரூ.2,000 நோட்டு அறிமுகம் செய்துள்ளதால் ஊழல் 2 மடங்கு அதிகமாகும். இதையெல்லாம் பார்க்கும்போது மோடியின் ஆட்சி முகமதுபின் துக்ளக் ஆட்சியை நினைவுபடுத்துகிறது.
அனைவருடனும் பேசி ஒருமித்த கருத்தின் அடிப்படையில்தான் பொது சிவில் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும். தமிழகத்தில் அரசியல் மாற்றம் வேண்டும் என்று மக்கள் நினைக்கின்றனர். அந்த மாற்று அரசியல் இயக்கமாக கம்யூ னிஸ்ட் உருவெடுக்கும்” என்றார்.
மாநாட்டின் தொடக்கமாக கட்சி யின் மத்தியக் குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் கொடியேற்றி னார். மத்தியக் குழு உறுப்பினர் பி.சம்பத் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ் ணன் பேசினார் மாலையில் பாளை யங்கோட்டை நூற்றாண்டு மண்டபத் தில் ‘நவம்பர் புரட்சி’ தின கருத் தரங்கம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் கே.ஜி.பாஸ்கரன் தலைமை வகித்தார். சீத்தாராம் யெச்சூரி, மத்தியக் குழு உறுப்பினர் கள் உ.வாசுகி, அ.சவுந்திரராஜன் ஆகியோர் பேசினர்.