கொல்லைப்புறம் வழியாக ஆட்சியை பிடிக்க திமுக எப்போதும் விரும்பாது என்று எதிர்க்கட்சித் தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் திமுகவில் இணையும் விழா நேற்று இரவு மதுராந்தகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் தலைமை தாங்கினார். மதுராந் தகம் நகர செயலாளர் கே.குமார் வரவேற்றார். திமுகவில் புதிதாக இணைந்தவர்களை வாழ்த்தி அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
தமிழகத்தில், உச்ச நீதிமன் றத்தால் தண்டிக்கப்பட்ட ஒருவர் முதலமைச்சராக இருந்தது அவமானகரமானது. அவர் சிறையில் இருக்கும்போது, அப் போது முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் சென்று பார்த் தார். தற்போது முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிசாமியும் விரைவில் சிறை யில் உள்ள சசிகலாவைச் சென்று பார்ப்பார். இதுதான் தமிழகத்தின் இன்றைய அவல நிலை. இருவருமே பினாமி முதலமைச்சர்கள்தான்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் நமக்கும், அதிமுகவுக்கும் இடை யில் இருக்கும் வாக்கு வித்தியா சம் வெறும் 1.1 சதவீதம்தான். 184 சட்டமன்ற உறுப்பினர்களைப் பெற்று அதிக பலத்தோடு ஆட்சி செய்த கட்சி என்ற பெருமை திமுகவுக்கு உண்டு. அதேபோல் தற்போது 89 சட்டமன்ற உறுப் பினர்களைப் பெற்று அதிக உறுப்பினர்களுடன் எதிர்க்கட்சி யாக உள்ளோம்.
முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை, எம்.ஜி.ஆர். ஆகியோர் மருத்துவமனையில் இருந்தபோது மக்கள் நல்வாழ் வுத் துறை அமைச்சர்கள்தான் அவர்களின் உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிடு வர். ஜெயலலிதா 75 நாட்கள் மருத்துவமனையில் இருந்த போது, அவர் எப்படி இருக்கிறார் என்ற செய்தியே வரவில்லை.
நீதி விசாரணை நடக்குமா?
ஜெயலலிதாவுக்கு அடுத்த தாக இருந்த ஓ.பன்னீர்செல்வ மும் ஏதும் சொல்லவில்லை. ஆனால், முதல்வர் பதவி இல்லை என்று தெரிந்ததும், ஜெயலலிதா மரணத்தில் சந்தே கம் இருப்பதாக கூறுவது வெட்கக்கேடானது. அவர் ஜெ. மரணம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று அறிவித் துள்ளார். இப்போது வந்துள்ள முதல்வர் நீதி விசாரணை நடத் துவாரா? அவ்வாறு நடத்தினால் தற்போது 4 ஆண்டு சிறையில் இருக்கும் சிலர் ஆயுள் கைதியாக மாறுவர்.
சட்டப்பேரவையில் 15 நாள் அவகாசம் இருக்கும்போது, கூவத்தூரில் சட்டமன்ற உறுப்பி னர்களை அடைத்து வைத்து ஏன் அவசர, அவசரமாக நம் பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும். அவர்களை தொகு திக்குள் சுதந்திரமாக அனும தித்துவிட்டு நடத்துங்கள். இல் லையேல் ரகசிய வாக்கெடுப்பு நடத்துங்கள் என்று கோரிக்கை வைத்தோம்.
ஆனால் எங்கள் கோரிக் கையை ஏற்காமல் எங்களை வெளியேற்றினர். இப்பிரச்சினை தொடர்பாக குடியரசுத் தலை வரை சந்தித்து முறையிட உள் ளோம். நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளோம்.
எங்களிடமும், கூட்டணிக் கட்சிகளிடமும் 98 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். அதற் காக மற்ற கட்சிகளில் இருந்து சட்டமன்ற உறுப்பினர்களை இழுத்து கொல்லைப்புறமாக ஆட்சி அமைக்க திமுக எப் போதும் முயற்சிக்காது என்று அவர் பேசினார். சட்டமன்ற உறுப்பினர்கள் சி.வி.எம்.பி.எழி லரசன், ஆர்.டி.அரசு, மாவட்ட அவைத் தலைவர் சி.வி.எம்.அ.பொன்மொழி உட்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்