தமிழகம்

அம்பேத்கரின் 127-வது பிறந்த நாள்: முதல்வர், அரசியல் தலைவர்கள் மரியாதை

செய்திப்பிரிவு

அம்பேத்கரின் 127-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அம்பேத்கரின் 127-வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு சென்னை துறைமுக பொறுப்புக்கழக வளா கத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு அருகில் வைக்கப்பட் டிருந்த அவரது படத்துக்கு, தமிழக அரசு சார்பில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். நிகழ்ச் சியில் திண்டுக்கல் சீனிவாசன், கே.ஏ.செங்கோட்டையன், செல்லூர் ராஜூ, தங்கமணி, எஸ்.பி.வேலு மணி, டி.ஜெயக்குமார், ஆர்.பி. உதயகுமார், சரோஜா, ராஜலட்சுமி உள்ளிட்டஅமைச்சர்கள், எம்பிக் கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதிமுக (அம்மா) அணி சார்பில் துணைப் பொதுசெயலாளர் டிடிவி. தினகரன் சென்னை கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரை, அதிமுக (அம்மா) கட்சியின் அவைத் தலைவர் அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையன், தலைமை நிலைய செயலாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் டி.ஜெயக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதேபோல, அதிமுக புரட்சித் தலைவி அம்மா கட்சியின் அவைத் தலைவர் இ.மதுசூதனன், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர்கள் சி.பொன் னையன், கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோரும் கோடம்பாக்கத்தில் உள்ள அம்பேத்கரின் சிலைக்கு அருகில் வைக்கப்படிருந்த படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதேபோல, சென்னை துறைமுக வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த அம்பேத்கரின் படத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் சு. திருநாவுக்கரசர், எஸ்.சி பிரிவு மாநில தலைவர் செல்வப் பெருந்தகை, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன், மூத்த தலைவர்கள் ஆர்.நல்லகண்ணு, தா.பாண்டியன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத் தில் அம்பேத்கரின் படத்துக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் மலர் தூவி மரியாதை செய்தார்.

சென்னை சைதாப்பேட்டையில் ராஜா கல்லூரி மாணவர் விடுதியில் அமைந்துள்ள அம்பேத்கரின் சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநில செய லாளர் ஜி.ராமகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் ஆகியோரும் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி நேரு விளையாட்டு அரங்கம் அருகில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத் தினார். சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

புகைப்பட கண்காட்சி

சென்னை ராஜா அண்ணா மலைபுரத்தில் அமைந்துள்ள அம்பேத்கரின் மணிமண்டபத்தில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் சார்பில் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறு குறித்த சிறப்பு புகைப்பட கண்காட்சி நேற்று தொடங்கியது. நாளை வரை நடைபெறும் இந்த கண்காட்சியில் அம்பேத்கரின் அரிய புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.

இதுதவிர, குழந்தைகளுக்கான ஓவியப் போட்டி, பறை இசை உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நேற்று அங்கு நடைபெற்றன.

SCROLL FOR NEXT