தமிழகம்

முதல்வருக்கு வணிகர் அமைப்பு பாராட்டு

செய்திப்பிரிவு

கடையடைப்பு மற்றும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட வேண்டாம் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியதற்கு, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக விக்கிரமராஜா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:

ஜெயலலிதா மீதான வழக்கில் வெளியான தீர்ப்பினால் தமிழகத் தில் அசாதாரண சூழ்நிலை நிலவி வந்தது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வணிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் கடையடைப்புகளை அறிவிக்க வேண்டாம் என்று ஆளுங் கட்சியினரையும், தமிழக முதல் வரையும் கேட்டுக்கொண்டோம். இதைத்தொடர்ந்து தமிழக முதல் வரும் கடையடைப்பு மற்றும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடக் கூடாது என்று அறிவிப்பு வெளியிட் டுள்ளார். இதற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.

SCROLL FOR NEXT