சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விதிப்புக்குப் பிறகு நாடு முழுவதும் உள்ள வரி வசூல் சோதனைச் சாவடிகள் அகற்றப்பட்டு, சரக்கு வாக னங்களின் பயண நேரம் பாதியாகக் குறையும் என்று மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
கோவையில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது: ஜிஎஸ்டி வரிவிதிப்பின்போது ஆரம்ப கட்டத் தில் சில பிரச்சினைகள் இருந்தாலும், பின்னர் அவை நீக்கப்பட்டு, நாட்டின் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும். ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட 3 மாதங் களுக்குப் பிறகு, வரிவிதிப்பு முறை களில் உள்ள சாகத, பாதகங்களை ஆய்வு செய்து, தேவையான மாற்றங்களைச் செய்யவும் மத்திய அரசு தயாராக உள்ளது.
நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பு முறை அமல்படுத்தப்படுவதால், மாநில, மாவட்ட எல்லைப் பகுதிகளில் உள்ள வரி வசூல் சோதனைச் சாவடி கள் அகற்றப்படும். சரக்கு வாகனங் கள் சோதனைச் சாவடிகளில் காத்தி ருக்கத் தேவையிருக்காது.
இதனால் சரக்குகளை ஓரிடத்திலி ருந்து மற்றொரு இடத்துக்குக் கொண்டு செல்வதற்கான பயண நேரமும் பாதியளவு குறையும். குறிப்பாக, பல்வேறு மாநிலங்களைக் கடந்து செல்ல வேண்டிய பொருட் கள், வெகு விரைவாக குறிப்பிட்ட இடத்தை அடையும்.
ஜவுளி உள்ளிட்ட ஏற்றுமதியாளர் களுக்கு கிடைக்கும் வரிச் சலுகை கள் இனி கிடைக்காதோ என்று அச்சம் கொள்ளத் தேவையில்லை. ஜிஎஸ்டியால் ஏற்றுமதியாளர்கள் எந்த வகையிலும் பாதிக்கப்பட மாட்டார்கள்.
பெட்ரோலியப் பொருட்கள் ஜிஎஸ்டி வரி விதிப்பில் வரவில்லை. எனினும், வருங்காலத்தில் பெட்ரோ லியப் பொருட்களையும் ஜிஎஸ்டி வரி விதிப்புக்கு உட்படுத்துவது குறித்து மத்திய அரசு ஆலோசனை நடத்தும்.
ஜிஎஸ்டி வரி விதிப்பை மத்திய அரசு தன்னிச்சையாக அறிவிக்க வில்லை. காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆளும் மாநிலங்களின் நிதி அமைச்சர்களும் இடம்பெற்றுள்ள ஜிஎஸ்டி கவுன்சில்தான் வரி விதிப்பை நிர்ணயம் செய்தது. இந்த நிலையில், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் ஜிஎஸ்டி வரி விதிப்பை குறைகூறுவது ஏன் எனத் தெரியவில்லை என்றார்.