தமிழகம்

50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி அனைத்து கட்சித் தலைவர்கள் மே 2-ல் சென்னையில் ஆர்ப்பாட்டம்: டாக்டர்கள் சங்கம் தகவல்

செய்திப்பிரிவு

அரசு டாக்டர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி அனைத்துக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் ஆர்ப்பாட்டம் மே 2-ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது என்று சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்க பொதுச்செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் சென் னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

அரசு டாக்டர்களுக்கு முது நிலை மருத்துவப் படிப்புகளில் வழங்கப் பட்டு வந்த 50 சதவீத இடங்கள் மற்றும் உயர் சிறப்பு மருத்துவக் கல்வியில் அரசு டாக்டர்களுக்கு கிடைத்துவந்த இட ஒதுக்கீட்டை பாதுகாக்க மத்திய அரசு உடனடியாக அவசரச் சட்டம் கொண்டுவர வேண் டும். தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இளநிலை, முதுநிலை, உயர் சிறப்பு மருத் துவ இடங்களுக்கு நீட் நுழைவுத் தேர்விலிருந்து விலக்கு வழங்கிட மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை, உயர்சிறப்பு மருத்துவ இடங்கள் அனைத்தும் அந்தந்த மாநிலத்தவருக்கே கிடைத் திட மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். நெக்ஸ்ட் என்ற எக்ஸிட் தேர்வை மத்திய அரசு புகுத்தக் கூடாது.

இந்திய மருத்துவக் கவுன் சிலை ஒழித்துவிட்டு, அதற்குப் பதிலாக தேசிய மருத்துவ ஆணையத்தை கொண்டுவரக் கூடாது.

நாடுமுழுவதும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலை மருத்துவப் பல்கலைக் கழகங்களின் கல்விக் கட்டணத்தை நியாயமான முறையில் நிர்ணயித் திட மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்துக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் ஆர்ப்பாட்டம் வரும் மே மாதம் 2-ம் தேதி மாலை 4 மணி அளவில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற உள்ளது. ஏராளமான டாக்டர்கள், மருத்துவ மாணவர்கள் போராட்டத்தில் பங் கேற்க உள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பேட்டியின் போது டாக்டர்கள் ஜி.ரமேஷ், ஏ.கார்த்திகேயன், என்.வெங்கடேஷ், எம்.ஜான கிராமன், ஏ.எஸ்.அடைக்கலம், பி.தர்மலிங் கம், எஸ்.வரபிரசாத், உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

SCROLL FOR NEXT