தமிழகம்

ஆன்லைனில் சிலிண்டர் பதிந்தால் ரூ.5 தள்ளுபடி

செய்திப்பிரிவு

வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டரை ஆன்லைன் மூலம் பதிவு செய்து பெற்றால் ரூ.5 தள்ளுபடி வழங்கப்படும் என எண்ணெய் நிறுவனங்கள் தெரி வித்துள்ளன.

மத்திய அரசு பணமதிப்பு நீக்க நடவடிக்கையை அறிவித்த பிறகு வங்கிகளில் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பணமில்லா பரிவர்த்தனையை ஊக்கப்படுத்த மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் எண் ணெய் நிறுவனங்களிடம் பண மில்லா பரிவர்த்தனையை மேற்கொள்ளும்படி அறிவுறுத் தியது.

இதன்படி, இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ் தான் பெட்ரோலியம் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களை பணமில்லா பரிவர்த்தனையை மேற்கொள்ளும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

இதன்படி, பொதுமக்கள் தங்கள் வீட்டுக்கு தேவையான சமையல் எரிவாயு சிலிண்டரை ஆன்லைன் மூலம் நெட் பேங்கிங், கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை பயன்படுத்தி முன்பதிவு செய்தால் அவர்களுக்கு ரூ.5 தள்ளுபடி விலையில் சிலிண்டர் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே வாடிக்கையாளர் கள் இந்த வாய்ப்பை பயன்படுத் திக் கொள்ளும்படி எண் ணெய் நிறுவனங்கள் தெரிவித் துள்ளன.

SCROLL FOR NEXT