டெங்கு காய்ச்சல் ஏற்படாமல் தடுக்க தொடர் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் ஏற்படாமல் தடுப்பது குறித்து திமுக உறுப்பினர்கள் துரைமுருகன், ப.ரங்கநாதன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, எம்.கே.மோகன், நா.கார்த்திக் ஆகியோர் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு பதிலளித்து அமைச்சர் கூறிய தாவது:
அரசு எடுத்து வரும் நடவடிக்கை களால் தமிழகத்தில் டெங்கு உள்ளிட்ட அனைத்து தொற்று நோய்களும் முழுமையாக கட்டுப் படுத்தப்பட்டு தொடர் கண்காணிப் பில் உள்ளன. டெங்கு போன்ற தொற்று நோய்களின் தாக்கம் மற்றும் நிலை குறித்த அறிக்கை கள் தினமும் பெறப்பட்டு, துறை செயலாளர்களால் ஆய்வு செய் யப்பட்டு உடனுக்குடன் நடவடிக் கைகள் எடுக்கப்படுகின்றன.
எங்கேயாவது 3-க்கும் அதிக மான நபர்களுக்கு காய்ச்சல் இருப் பது கண்டறியப்படும் பகுதிகளில் அதற்கான காரணத்தை கண்டறிந்து அதை முற்றிலும் ஒழிக்க நட வடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.
எலிசா முறையில் டெங்கு காய்ச் சலை கண்டுபிடிக்கும் சோதனை மையங்கள் 31-ல் இருந்து 75 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. டெங்கு சிகிச்சைக்கு தேவையான மருந்து கள், ரத்த அணுக்கள், பரிசோதனைக் கருவிகள், ரத்தக் கூறுகள், ரத்தம் ஆகியவை அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
உள்ளாட்சி அமைப்புகள் மூல மாக 250 முதல் 500 வீடுகளுக்கு ஒருவர் வீதம் கொசு ஒழிப்பு பணி யாளர்கள் அமர்த்தப்பட்டுள்ளனர். நிலவேம்பு குடிநீர், பப்பாளி இலைச் சாறு, மலைவேம்பு இலைச் சாறு ஆகியவை அரசு மருத்துவ மனைகளில் வழங்கப்படுகின்றன.
ஊடகங்களில் வரும் செய்தி களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை பொது சுகாதாரத் துறை இயக்குநரகத்தில் செயல்படுகிறது. அரசு எடுத்த நடவடிக்கைகளால் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் டெங்கு நோயின் தாக்கம் வெகுவாக குறைந்துள்ளது. விழிப்புணர்வு, தடுப்பு நட வடிக்கைகள் மூலம் டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க தொடர் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.