பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற ஆதரவு அளிக்குமாறு 108 ஆம்புலன்ஸ் வாகன ஊழியர்கள் துண்டு பிரசுரங்களை நேற்று பொதுமக்களிடம் வழங்கினர்.
தமிழ்நாடு சுகாதாரத் துறையின் கட்டுப்பாட்டில் 108 ஆம்புலன்ஸ் வாகன சேவை செயல்பட்டு வருகி றது. விபத்து மற்றும் அவசர காலங்களில் உயிருக்கு போராடு பவர்களை மீட்டு, அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, அருகே உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சேர்ப்பது 108 ஆம்புலன்ஸ் வாகன சேவையாகும்.
இந்நிலையில், தங்கள் துறையில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டி அதை தீர்க்க வலியுறுத்தி 108 ஆம்புலன்ஸ் வாகன ஊழியர்கள் துண்டுப் பிரசுரத்தை பொதுமக்களிடம் வழங்கினர்.
வேலூர் மாவட்டத்தில், வாலாஜா, குடியாத்தம் மற்றும் திருப்பத்தூர் பேருந்து நிலையம், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் 108 ஆம்புலன்ஸ் வாகன ஊழியர்கள் துண்டுப் பிரசுரங்களை வழங்கினர்.
அதில், நிர்ணயிக்கப்பட்ட பணி நேரத்தை காட்டிலும் கூடுதல் வேலை வாங்குகின்றனர். பயன்பாட்டில் உள்ள 108 ஆம்புலன்ஸ் வாகனங் களை முறையாக பராமரிக்காததால், விபத்து நடந்த இடத்துக்கு குறிப் பிட்ட நேரத்தில் வாகனங்களை இயக்க முடியவில்லை.
கடந்த 6 மாதமாக சம்பள உயர்வு வழங்கப் படவில்லை. பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் பணிய மர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கி ஆதரவு திரட்டினர்.