தமிழகம்

‘தி இந்து’ வாசகர்கள் தாராள உதவி: புற்றுநோயில் இருந்து மீண்டு வரும் பெண் நன்றி

செய்திப்பிரிவு

சென்னையைச் சேர்ந்த தனியார் பொறியியல் கல்லூரி உதவிப் பேராசிரியர் கவிதா, புற்றுநோயு டன் போராடி மீண்டு வந்த நிலையில் அவருக்கு மீண்டும் நுரையீரலில் புற்றுநோய் வந்தி ருப்பது குறித்து ‘தி இந்து’ நாளிதழி லும் ‘பெண் இன்று’ இணைப்பி தழிலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்தி வெளியாகி இருந் தது.

கவிதாவின் நம்பிக்கையை அதிகரிக்கும் வகையில் நம் வாச கர்கள் பலரும் நம்மை தொடர்பு கொண்டு பேசியதுடன் அவரு டைய சிகிச்சைக்காக பண உதவி யும் அளித்துள்ளனர். வாசகர்கள் அனைவரும் தங்கள் அன்பால் தன்னை நெகிழச் செய்துவிட்டதாக சொல்கிறார் கவிதா.

“புற்றுநோய் எனக்கு பல விஷயங்களை உணர்த்தி உள்ளது. நம்மைச் சுற்றி இவ்வளவு நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதே என் நம்பிக்கையை அதிகரிக்கிறது. முகம் தெரியாத, பெயர் அறியாத பலரும் எனக் காக உதவியதை நினைத்து நெகிழ்கிறேன். வசதியற்ற பலர் தங்களால் முடிந்த சிறு தொகையை மனம் உவந்து அளித்திருப்பதை நினைக்கும்போதே கண்கள் நிறைகின்றன.

‘தி இந்து’ நாளிதழிலும் ‘பெண் இன்று’ இணைப்பிதழிலும் வெளியான செய்தியை படித்து விட்டு பலரும் என்னைத் தொடர்பு கொண்டு பேசினர். என்னிடம் படித்த திண்டுக்கல்லைச் சேர்ந்த முன்னாள் மாணவர்கள் சென் னைக்கு வந்து என்னைச் சந்தித்து சென்ற நொடிகள் மறக்கமுடியா தவை.

புற்றுநோயால் பாதிக் கப்பட்ட ஒருவருக்கு அவருடைய நண்பர்கள் பண உதவி செய்திருக்கிறார்கள். அதில் ஒரு தொகையை என் சிகிச்சைக்கு தந்து உதவியவருக்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியா மல் தவிக்கிறேன்.

ஒருவரை காதலித்து ஏமாற்ற மடைந்த ஒரு பெண், பெற்றோருக் குக் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலைக்கு துணிந்தபோது நான் எழுதிய கட்டுரைத் தொடரை வாசித்திருக்கிறார். புற்றுநோயு டன் போராடும் இவர்களே வாழ்க்கையைத் துணிச்சலுடன் எதிர்கொள்ளும்போது, நான் ஏன் சாக வேண்டும் என்று அந்தப் பெண் நினைத்திருக்கிறார்.

உடனே தன் பெற்றோரிடம் அனைத்தையும் சொல்லி, தனக்கு திருமணத்துக்கு ஏற்பாடு செய்யும்படி சொல்லியி ருக்கிறார். இப்போது அந்தப் பெண் திருமணமாகி, புகுந்த வீட்டில் மகிழ்வுடன் இருக்கிறார்.

எனக்கு மீண்டும் புற்றுநோய் பரவி இருப்பது தெரிந்ததும் அந்தப் பெண் தன் தந்தையை அழைத்து, எனக்கு பண உதவி செய்யும்படி சொல்லி இருக்கிறார். இந்த விஷயத்தை அந்த பெண்ணின் தந்தை சொன்னபோது பேச்சு இழந்து போனேன்.

நான் வாழ்வதற்கான அர்த்தம் எனக்கு விளங்கிவிட்டது. வாசகர் களின் அன்பாலும் உதவியாலும் இந்த நுரையீரல் புற்று நோயையும் கடந்து வருவேன். எனக்கு உத விய அனைத்து நல்ல உள்ளங் களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி” என்று உருக்கமாகக் கூறினார் கவிதா.

SCROLL FOR NEXT