மத்திய அரசின் ராஷ்ட்ரிய அவிஷ்கர் அபியான் திட்டத்தைச் செயல்படுத்துவதில், திருவாரூர் மாவட்டம் மேலராதாநல்லூர் அரசு உயர்நிலைப் பள்ளி மாநிலத் திலேயே முன்னோடியாகத் திகழ்கிறது.
பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தல், உயர் கல்வி நிலையங்களில் உள்ள கற்றல் பொருட்களைப் பள்ளி மாணவர்கள் பயன்படுத்திக்கொள் ளுதல், பள்ளிகளை அருகில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களுடன் இணைத்தல் ஆகிய நோக்கங்களு டன், முன்னாள் குடியரசுத் தலை வர் அப்துல் கலாமால் அறிமுகப் படுத்தப்பட்டது ராஷ்ட்ரிய அவிஷ் கர் அபியான் திட்டம். இது மத்திய மனித வள மேம்பாட்டுத் துறையால் செயல் படுத்தப்படுகிறது.
இந்தத் திட்டத்தை, திருவா ரூர் மாவட்டம் மேலராதாநல்லூர் அரசு உயர்நிலைப் பள்ளி சிறப்பாகச் செயல்படுத்துகிறது. இங்கு பயிலும் 6, 7, 8-ம் வகுப்பு மாண வர்களுக்கு, திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் பயிற்சி வழங் கப்பட்டது. அங்கு, எளிய இயற் பியல் சோதனைகள், உயிரியல் மாதிரிகளை நுண்ணோக்கிகளில் காணுதல், வேதியியல் ஆய்வகப் பயிற்சி ஆகியவற்றில் பள்ளி மாணவர்கள் ஈடுபட்டனர்.
இதேபோல, தஞ்சையில் உள்ள இந்திய உணவு மற்றும் பயிர் பதன தொழில்நுட்பக் கழகத்தையும் பார்வையிட்டு, அங்கு உள்ள பேராசிரியர்களி டம் பல்வேறு விளக்கங்களைக் கேட்டறிந்தனர்.
இப்பள்ளியின் இலக்கிய மன்றத் தொடக்க விழா, தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நடைபெற் ற து. தஞ்சை தென்னகப் பண்பாட்டு மையத்துக்குச் சென்ற மாணவர் களுக்கு, பழந்தமிழர் வாழ்க்கை முறை, கலைகள் குறித்து விளக் கப்பட்டது. இதேபோல, அரசு மருத்துவக் கல்லூரியில், உடற் கூறு குறித்து பயிற்சி பெற்றனர். மேலும், விடுமுறை நாட்களில், அரசின் உண்டு, உறைவிடப் பள்ளிக்குச் சென்ற மாணவர்கள், அங்கு உள்ள மாணவர்களுடன் தங்கி, படித்து, விளையாடினர்.
இதுகுறித்து திட்ட ஒருங்கி ணைப்பாளரும், பள்ளி ஆசிரியரு மான மணிமாறன் கூறியது: கடந்த மார்ச் மாதம் முதல் பல்வேறு கல்வி நிறுவனங்களுக்கு அழைத் துச் செல்லப்பட்ட மாணவர்கள், தங்களது சந்தேகங்களுக்குப் பேராசிரியர்களிடம் விளக்கம் பெற் றனர். இந்தப் பயணம் குறித்து, பள்ளியில் அடுத்த நாள் விவாதத் தில் ஈடுபட்டனர்.
இதுபோன்ற செயல்பாடு களால், உயர் கல்வி கற்க வேண்டும் என்ற ஆர்வம், பள்ளிப் பருவத்திலேயே ஏற்படுகி றது. பள்ளியின் தொடர் அறிவியல் செயல்பாடுகளுக்கு, அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா, மதுரை கலிலியோ அறி வியல் அமைப்பு ஆகியவை சான்றிதழ்கள் வழங்கி உள்ளன.
மேலும், மாநில கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், யுனிசெப், சமூகக் கல்வி நிறுவனம் ஆகி யவை சார்பில், குழந்தை நேயப் பள்ளியாக இப்பள்ளி தேர்வு செய்யப்பட்டுள்ளது. ராஷ்ட்ரிய அவிஷ்கர் அபியான் திட்டத்தைச் செயல்படுத்துவதில், எங்கள் பள்ளி மாநில அளவில் முன்னோடியாகத் திகழ்கிறது என்றார்.