தமிழகம்

மேலும் 2 எம்எல்ஏக்கள் ஆதரவு: ஓபிஎஸ் தலைமையில் அதிமுக ஆட்சி அமையும் - செம்மலை எம்எல்ஏ உறுதி

செய்திப்பிரிவு

ஓபிஎஸ் தலைமையில் அறுதிப் பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி அமைவது உறுதி என்று செம்மலை எம்எல்ஏ கூறினார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் நேற்று காலை தீர்ப்பு வெளிவருவதற்கு முன்பு, அதிமுக அமைப்புச் செயலாளர் எஸ்.செம்மலை எம்எல்ஏ, மேட்டுப்பாளையம் தொகுதி எம்எல்ஏ சி்ன்னராஜ் ஆகியோர் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை அவரது இல்லத்தில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். அப்போது செம்மலை கூறியதாவது:

நல்ல தீர்க்கமான முடிவோடு தான் இங்கு வந்தேன். அதை நிரூபிக்கும் வகையில் சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வந்துள் ளது. முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சொன்னதைப்போல ஜெயலலி தாவின் ஆன்மா உயிரோடுதான் இருக்கிறது. எம்ஜிஆர் ஆட்சி, ஜெயலலிதா ஆட்சி தொடரும்.

என்னைப்போல நிறைய எம்எல்ஏக்கள் ஓபிஎஸ்-க்கு ஆதரவு தெரிவிக்க வந்து கொண்டிருக்கிறார்கள். இன்னும் பலர் வருவார்கள். அறுதிப் பெரும்பான்மையோடு ஓபிஎஸ் தலைமையில் ஆட்சி தொடரும். ஓ.பன்னீர்செல்வத்தால்தான் அதிமுகவை காப்பாற்ற முடியும்.இவ்வாறு செம்மலை கூறினார்.

மேட்டுப்பாளையம் எம்எல்ஏ சின்னராஜ் கூறும்போது, ‘‘மக்க ளின் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பதை நிரூபிக்கும் வகையில் ஜெயலலிதாவின் எண்ணம் ஈடேறும் வகையில் அதிமுக இயக்கம் 100 ஆண்டுகள் இருக்கும். இந்த மாபெரும் இயக் கத்தை வழிநடத்தக் கூடிய தலைவராக ஓபிஎஸ் இருப்பார். ஜெயலலிதா கண்ட கனவு நிச்சயம் நிறைவேறும்’’ என்றார்.

முன்னாள் எம்பி சின்னச்சாமியும் முதல்வர் ஓ.பன்னீர்செல் வத்தின் இல்லத்துக்கு வந்து அவருக்கு தனது ஆதரவை தெரிவித்தார்.

SCROLL FOR NEXT