அரசு வழங்கிய தென்பெண்ணை வீட்டை காலி செய்த ஓ.பன்னீர் செல்வம், வீனஸ் காலனி யில் வாடகை வீட்டில் குடியேறினார்.
கடந்த 2011-ம் ஆண்டில் அதிமுக ஆட்சி அமைத்தபோது ஜெயலலிதா அமைச்சரவையில் ஓ.பன்னீர்செல்வம் நிதியமைச் சரானார். அவருக்கு ஆர்.ஏ.புரம் கிரீன்வேஸ் சாலையில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்த மான ‘தென்பெண்ணை இல்லம்’ ஒதுக்கப்பட்டது. கடந்த 6 ஆண்டு களாக அந்த வீட்டில்தான் குடியிருந்து வந்தார்.
இந்நிலையில், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் சசிகலாவின் தலைமையை எதிர்த்து தனி அணியாக ஓபிஎஸ் செயல்பட்டு வருகிறார்.
அரசு வீட்டை காலி செய்யும் படி அவருக்கு பொதுப்பணித் துறை சார்பில் நோட்டீஸ் அனுப் பப்பட்டது. அதற்கான கால அவ காசம் இருந்தபோதும், வாடகை வீட்டுக்கு மாற ஓபிஎஸ் முடிவு செய் தார். தொண்டர்கள், நிர்வாகிகளை சந்திக்க வசதியான வீட்டை தேடி வந்தார். ஆழ்வார்ப்பேட்டை வீனஸ் காலனி 1-வது தெருவில் ஒரு வீட்டை குடும்பத்தினருடன் சென்று பார்த்து இறுதி செய்தார்.
இதையடுத்து, அந்த வீட்டில் நேற்று பால் காய்ச்சி, கணபதி ஹோமம் நடத்தினார். பின்னர் குடும்பத்தினருடன் புதிய வீட்டில் குடியேறிய ஓபிஎஸ் அங்கு பொன்னையன், பாண்டியராஜன் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.