தமிழகம்

மூவருக்கும் மிகுந்த மகிழ்ச்சி: வேலூர் சிறை அதிகாரி தகவல்

செய்திப்பிரிவு

பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோர் நேற்றைவிட இன்றுதான் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருந்ததாக, வேலூர் சிறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

வேலூர் சிறை அதிகாரி ஒருவர் இன்று (புதன்கிழமை) செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியது:

"அவர்கள் (மூவர்) நேற்றைவிட இன்றுதான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார்கள். எங்களுக்கு உத்தரவு கையில் கிடைத்தவுடன், அனைவரும் விடுதலை செய்யப்பட்டுவிடுவர். பெரிய அளவில் நடைமுறைகள் எதுவும் இல்லை. சிறையில் அவர்கள் செய்த வேலைகளுக்கு குறிப்பிடத்தக்க அளவில் தொகுப்பூதியம் இருக்காது" என்றார் அந்த அதிகாரி.

முன்னதாக, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளனுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

இந்த மூவரின் கருணை மனுக்களை பரிசீலிப்பது தொடர்பாக குடியரசுத் தலைவர் 11 ஆண்டுகள் கால தாமதம் செய்ததன் காரணமாக, பாதிக்கப்பட்டவர்களுக்கு தண்டனை குறைப்பு செய்வதாக நீதிமன்றம் தெரிவித்தது.

இதன் தொடர்ச்சியாக, ராஜீவ் கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக, சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா இன்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT