பா.ஜ.க. பொதுச் செயலாளர் சேலம் ஆடிட்டர் ரமேஷ், வேலூர் இந்து முன்னணி பிரமுகர் வெள்ளையப்பன் உள்ளிட்ட நான்கு முக்கிய அமைப்புத் தலைவர்கள் கொலை செய்யப்பட்ட வழக்குத் தொடர்பாக தேடப்பட்டு வந்த போலீஸ் பக்ருதீன் 34, என்பவரை சென்னை சூளைமேட்டில் போலீசார் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனர். பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற, திருப்பதி திருக்குடை ஊர்வல நிகழ்ச்சியை சீ்ர்குலைக்கும் முயற்சியில் அவர் சென்னை வந்ததாக தெரிகிறது. மேலும், அவரது கூட்டாளிகள் சிலரும் திருப்பூரில் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனர். பாஜக மூத்த தலைவர் அத்வானி கொலை முயற்சி வழக்கு உள்ளிட்ட பல்வேறு தீவிரவாத சம்பவங்களில் தொடர்புடையவர் பக்ருதீன் என போலீசார் கூறினர். அவரைப் பற்றிய தகவல்களைத் தருவோருக்கு வெகுமதி அளிக்கப்படும் என்று போலீசார் அறிவித்திருந்தனர்.