அதிமுக ஆதரவு எம்எல்ஏக்கள் தமிமுன் அன்சாரி, தனியரசு, கரு ணாஸ் ஆகியோர் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டா லினை மீண்டும் சந்தித்து பேசினர்.
அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி, கொங்கு இளைஞர் பேரவை தலைவர் உ.தனியரசு, முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் ஆகியோர் சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அறையில் ஸ்டாலினை நேற்று முன்தினம் திடீரென சந்தித்துப் பேசினர்.
அப்போது, ‘‘ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு பரோல் வழங்க பேரவையில் குரல் கொடுக்க வேண்டும்’’ என ஸ்டாலினிடம் வலியுறுத்தினர். அதன்படி, பேரறிவாளனுக்கு பரோல் வழங்க வேண்டும் என சட்டப்பேரவையில் நேற்று ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். இதைத் தொடர்ந்து தமிமுன் அன்சாரி, தனியரசு, கருணாஸ் ஆகியோர் நேற்று ஸ்டாலினை அவரது அறையில் மீண்டும் சந்தித்து நன்றி தெரி வித்தனர்.