தமிழகம்

கைதி கொலை சம்பவம்: 4 போலீஸார் சஸ்பெண்ட்

செய்திப்பிரிவு

திருநெல்வேலியில் நீதிமன்றத் துக்கு அழைத்துச் சென்றபோது, போலீஸ் வாகனத்தில் கைதி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சிறப்பு எஸ்ஐ உட்பட 4 போலீஸார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள புல்லா வெளி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் என்ற சிங் காரம் (47). தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு தலை வர் பசுபதி பாண்டியனின் ஆதர வாளரான இவரை, ஒரு வழக்கு தொடர்பாக தூத்துக்குடி நீதிமன் றத்தில் ஆஜர்படுத்த போலீஸார் கடந்த 24-ம் தேதி வாகனத்தில் அழைத்துச் சென்றனர்.

பாளையங்கோட்டை கேடிசி நகர் சோதனை சாவடி அருகே சென்றபோது கார்களில் ஆயுதங் களுடன் வந்த ஒரு கும்பல் திடீரென வாகனத்தை வழி மறித்து, போலீஸார் மீது மிளகாய் பொடி கரைசலை ஊற்றி, சிங்காரத்தை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது.

கொலையாளிகள் தப்பிச் செல்ல பயன்படுத்திய 4 கார்களை போலீஸார் கைப்பற்றினர். இதில் ஒரு காரில் ஆயுதங்கள் இருந்தன. விசாரணையில் இந்த கார்கள், சுபாஷ் பண்ணையார் தரப்பைச் சேர்ந்தவர்களுக்கு சொந்தமானவை என்பது தெரிய வந்தது. இது தொடர்பாக 11 பேரைப் பிடித்து தீவிர விசாரணை நடத்திய போலீஸார், கொலையில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஓரிருவரைத் தவிர மற்றவர்களை விடுவித்தனர்.

இதற்கிடையே, சிங்காரத்தை நீதிமன்றத்துக்கு வாகனத்தில் அழைத்துச் சென்ற தூத்துக்குடி ஆயுதப்படையைச் சேர்ந்த சிறப்பு எஸ்ஐ வீரபாகு, வாகன ஓட்டுநர் பிரகாஷ், காவலர்கள் பாலசுப்பிரமணியன், பிரின்ஸ் டன் ஆகிய 4 பேரையும் தூத் துக்குடி மாவட்ட எஸ்பி அஸ் வின் எம்.கோட்னீஸ் நேற்று பணியிடைநீக்கம் செய்து உத்தர விட்டார்.

திருநெல்வேலி அரசு மருத் துவக் கல்லூரி மருத்துவமனை யில் பிரேதப் பரிசோதனை முடிந்து வைக்கப்பட்டுள்ள சிங்காரத்தின் உடலை வாங்க நேற்று 4-வது நாளாக அவரது உறவினர்கள் மறுத்துவிட்டனர்.

SCROLL FOR NEXT