கோவையில் 'தி இந்து' நாளிதழ் குழுமம் சார்பில் வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் கார் ஃப்ரீ சண்டேஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
'தி இந்து'வுடன் கோவை மாநகராட்சியும், மாநகரக் காவல்துறையும் இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்தி வருகின்றன.
சாய்பாபாகாலனி அருகே உள்ள என்.எஸ்.ஆர். சாலையில் காலை 6 மணி முதல் காலை 9 மணி வரை வாகனப் போக்குவரத்தை முற்றிலு மாக நிறுத்தி, சாலையை மக்களின் பொழுதுப்போக்குப் பயன்பாட் டுக்கு கொண்டுவருவதோடு, புகை மாசுபாடு இல்லாத சூழலை உருவாக்கும் நோக்கில் இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், பதஞ்சலி யோகா சமிதி சார்பில் இலவச யோகா பயிற்சிகள் அளிக் கப்பட்டன. யோகா பயிற்சியினால் உடல் நலம் பெறுவது குறித்து, பேராசிரியர் லதா, தனது அனுபவத்தை பகிர்ந்துகொண்டார்.
சாய்பாபாகாலனியைச் சேர்ந்த கே.மோகன், 'நீரை உண், உணவைக் குடி' என்ற உடல்நலன் சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினார். உடற்பயிற்சி நடனத்தில் ஏராளமான சிறுவர், சிறுமியர் ஆர்வமுடன் கலந்து கொண்டு நடனமாடினர்.
நிகழ்ச்சி நடைபெற்ற பகுதியில் வாகனப் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டிருந்ததால், பள்ளி மாணவர்கள் தங்களுக்குப் பிடித்தமான விளையாட்டுகளில் ஈடுபட்டனர். கிரிக்கெட், சைக்கிள் பந்தயம், வாலிபால் என சாலையே விளையாட்டு மைதானமாக மாறியது. முன்னாள் ராணுவ வீரர் கோபால் என்பவர், தன்னார்வமாக வந்து போக்குவரத்தை சீரமைத்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை யும், காற்று மாசுபாடு இல்லாத வார விடுமுறையாக இருப்பதாகவும், பொழுதுபோக்கு நிகழ்ச்சியோடு உடல்நலன் விழிப்புணர்வு அளிப்பது மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது எனவும் அங்குள்ள மக்கள் 'தி இந்து'வுக்கு நன்றி தெரிவித்தனர்.