தமிழகம்

எம்எல்ஏக்களுக்கு உடல்நிலை பாதிப்பு?- கூவத்தூர் விடுதிக்கு விரைந்த ஆம்புலன்ஸ்: ஆற்காட்டிலிருந்து மருத்துவர்கள் வந்ததாக தகவல்

செய்திப்பிரிவு

அதிமுக எம்எல்ஏக்கள் தங்க வைக் கப்பட்டுள்ள கூவத்தூர் விடுதிக்கு தனியார் மருத்துவமனை ஆம்பு லன்ஸ் வந்து சென்றது. இதனால் எம்எல்ஏக்கள் சிலருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டிருக்கலாம் என அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட் டுள்ளது.

சசிகலாவுக்கு ஆதரவு தெரிவிப்ப தற்காக அதிமுக எம்எல்ஏக்களை, காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக் கம் அடுத்த கூவத்தூர் பேட்டை யில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் கடந்த புதன்கிழமை முதல் 6 நாட்களாக தங்க வைக்கப் பட்டுள்ளனர். அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் மூத்த தலைவர் கள் முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்து, அவரது அணிக்கு சென்று வருகின்றனர். இதனால், சசிகலா தரப்பினர் எம்எல்ஏக்களின் ஆதரவை பெறு வதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் எதிரொலியாக, சசிகலா கூவத்தூர் விடுதிக்கு நேற்றுவரை 3 முறை நேரில் சென்று எம்எல்ஏக் களுடன் ஆலோசனை நடத்தி உள் ளார். இதில், விடுதியில் தங்கியுள்ள எம்எல்ஏக்கள் பலர் அதிருப்தி தெரிவித்ததாகத் தெரிகிறது. விடுதியில் உள்ளவர்களை கட்சிக்கு அறிமுகப்படுத்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மூத்த தலைவர்கள், முதல்வர் பன்னீர் செல்வத்தின் அணியில் இணைந் துள்ளதால், தங்கள் நிலைப்பாட்டை தெரிவிக்குமாறு

விடுதியில் உள்ளவர்களிடம் பேசி வருகின்றனர். அதனால், அவர் களை நேரில் சந்திக்க அனுமதி அளிக்க வேண்டும் என சசிகலா தரப் பினரிடம் எம்எல்ஏக்கள் வலியுறுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

எனினும், இவர்களை சமாதானப் படுத்தும் முயற்சியில் செங்கோட் டையனும் டி.டி.வி.தினகரனும் ஈடுபட்டுள்ளதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, எம்எல்ஏக்களை உற்சாகத்துடன் வைத்திருப்ப தற்காக சொகுசு விடுதியில் பல் வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரு கின்றன. நிகழ்ச்சி நடைபெறுவதற்கு அடையாளமாக, விடுதியிலிருந்து இரவு 8 மணிக்கு மேல் ஒலிபெருக்கி களின் சத்தம் கேட்கிறது. இதனால், கிராம மக்கள் விடுதியில் என்ன நடக்கிறது என்பதை அறிவதற்காக விடுதியை சுற்றி சுற்றி வருகின்றனர்.

இதனிடையே, திருப்போரூர் எம்எல்ஏ கோதண்டபாணி உட்பட மேலும் சில எம்எல்ஏக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டதாகக் கூறப் படுகிறது. இதேபோல், அமைச்சர் சண்முகத்துக்கும் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகி றது. இதனால் மருத்துவமனைக்குச் சென்று வர அனுமதி கோரியதாகக் கூறப்படுகிறது.

ஆனால், சசிகலா தரப்பினர் விடுதியிலிருந்து வெளியே செல்ல யாருக்கும் அனுமதியில்லை என் றும் மருத்துவக் குழுவினரை விடு திக்கு வரவழைப்பதாகவும் கூறிய தாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து, எம்எல்ஏக் களுக்கு மருத்துவ சிகிச்சை அளிப் பதற்காக ஆற்காடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையிலிருந்து 2 மருத்துவர்கள் அடங்கிய குழு வினர், ஆம்புலன்ஸ் வாகனத்தில் நேற்று பிற்பகல் 12:30 மணிக்கு விடுதியின் உள்ளே சென்றனர். பின்னர், எம்எல்ஏக்களுக்கு சிகிச்சை அளித்துவிட்டு பகல் 3 மணிக்கு வெளியே வந்தனர்.

மேலும், பெண் எம்எல்ஏக்கள் சிலருக்கும் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தத் தகவல் பரவியதையடுத்து அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தலா ரூ.1000

இதனிடையே, கூவத்தூருக்கு நேற்று முன்தினம் மாலை வந்த சசிகலாவுக்கு ஆரத்தி எடுத்து வர வேற்ற கிராம மக்களிடம், குடும்ப அட்டையை கணக்கெடுப்பு செய்து, அவர்களுக்கு தலா ரூ.1000 வழங் கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில், ஒருசிலருக்கு பணம் கிடைக் கவில்லை எனக்கூறி, கிராம மக்கள் விடுதியின் பாதுகாப்புக்கு குவிக்கப் பட்டவர்களிடம் முறையிட்டதால், அதிமுக நிர்வாகிகள் சிலர் நேற்று அவர்களுக்கு பணம் வழங்கியதாகக் கூறப்படுகிறது.

கூவத்தூரிலிருந்து நேற்று இரவு சென்னைக்கு புறப்பட்டுச் சென்ற, சசிகலாவை கிராம மக்கள் சிலர் வழிமறித்தனர். அவர்களிடம் வாகனத்தில் இருந்தவாறே பேசினார். பின்னர், யுவஸ்ரீ என்ற குழந்தைக்கு தனது கைப்பையிலிருந்து சாக்லெட் ஒன்றை வழங்கிவிட்டு புறபட்டுச் சென்றார்.

SCROLL FOR NEXT