காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
2003-ம் ஆண்டு முதல் தமிழக அரசால் தூய்மை கிராம இயக்க விருது வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் தூய்மையான கிராம மாக தேர்ந்தெடுக்கப்படும் ஊராட்சிகளுக்கு பரிசும், தூய்மை கிராம இயக்க விருதும் வழங் கப்பட்டு வந்தது.
இத்திட்டம் கடந்த 2006-ல் கைவிடப்பட்டு, மீண்டும் 2011 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி ஆண்டுதோறும் மாவட்டத்துக்கு ஒரு ஊராட்சி வீதம் தேர்வு செய்து, விருதும், பரிசுத் தொகையும் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், கிராமத்தை தூய்மையாக பராமரித்ததற்காக 2013-14 நிதியாண்டுக்கு உத்திர மேரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட அனுமந்தண்டலம் ஊராட்சி தேர்வு செய்யப்பட்டு, பரிசுத்தொகையாக ரூ.5 லட்சம் வழங்கப்பட்டது. 2014-15 நிதியாண்டுக்கு திருக் கழுக்குன்றம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பெரியகாட்டுப்பாக்கம் ஊராட்சி தேர்வு செய்யப்பட்டு பரிசுத்தொகை ரூ.5 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.
இதேபோன்று மற்ற ஊராட்சிகளும் தூய்மை கிராம இயக்க விருது பெற, ஊராட்சி மன்றத் தலைவர்கள் முனைப்புடன் செயல்பட வேண்டும் என்று அந்த செய்திக்குறிப்பில் ஆட்சியர் கஜலட்சுமி வேண்டுகோள் விடுத் துள்ளார்.